ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் ஃபேவரிட் நாடகம்

Serial TRP Ratings: ஒவ்வொரு வார இறுதியிலும் சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை அதிகமாக பார்த்து வருகிறீர்கள் என்பதன் அடிப்படையில் டிஆர்பி ரேட்டிங் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் எந்த சீரியல்கள் அதிகமான இடத்தை பெற்றிருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அதில் 5-வது இடத்தில் அண்ணன் தங்கை பாசத்தை மட்டுமே வைத்து கதையை உருட்டி வரும் வானத்தைப்போல சீரியல் இடம் பெற்று இருக்கிறது. அடுத்ததாக கலெக்டர் ஆக வேண்டும் என்று நினைத்து அதைத் தவிர மற்ற எல்லா வேலையும் செய்து வரும் சுந்தரி சீரியல் 4- வது இடத்தை பிடித்திருக்கிறது.

Also read: கோபியின் மொத்த கொட்டத்தையும் அடக்கிய பாக்கியா.. நல்ல வச்சு செய்யும் மகன்கள்

இதனை அடுத்து குடும்பங்கள் அனைவரும் ரசித்து கொண்டாடப்பட்டு இல்லத்தரசிகளின் மனதை கொள்ளையடித்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் 3-வது இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் இதில் கோபி என்னதான் வில்லனாக இருந்தாலும் இவருடைய நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக தினமும் பார்த்து வருகிறார்கள்.

அடுத்ததாக ஹீரோயின் என்றால் இப்படித்தான் துணிச்சலாக இருக்க வேண்டும். அத்துடன் குடும்பத்திற்காக தனி ஒருவராக இருந்து போராடி எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வரும் கயல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருவதால் 2-வது இடத்தை பிடித்து மக்களின் ஃபேவரைட் சீரியலாக வருகிறது.

Also read: அதட்டி உருட்டி அனுப்பி வைத்த குணசேகரன்.. கரிகாலனுக்கு டிமிக்கி கொடுத்த ஆதிரை

இதற்கு அடுத்ததாக என்ன ஆனாலும் இந்த நாடகத்தை ஒரு நாள் கூட மிஸ் பண்ணாமல் பார்த்தால் மட்டும்தான் எங்களுக்கு தூக்கமே வரும் என்று நீண்ட நேரமாக காத்திருந்து பார்த்து வரும் எதிர்நீச்சல் சீரியல் தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் இந்த நாடகத்தின் வசனமும், கதாபாத்திரங்களும் தான்.

மேலும் எத்தனையோ சேனல்களில் இருந்து பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்கள் தினமும் பார்த்து ரசிப்பது ஒரு சில நாடகங்களை மட்டும் தான். முக்கியமாக அவர்களுக்கு பிடித்த நாடகங்களால் மட்டுமே டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க செய்கிறது. அந்த வகையில் எப்பொழுதும் போல சன் டிவி தான் அதிகமான நாடகங்களை தக்க வைத்து வருகிறது.

Also read: கண்ணனை தண்டித்த நேரத்தில் பிறந்த குழந்தை.. மீண்டும் குவா சத்தம் கேட்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

- Advertisement -

Trending News