ரியாலிட்டி ஷோவில் முதல் 5 இடத்தை பிடித்த விஜய் டிவி பிரபலங்கள்.. பிரியங்காவை பின்னுக்கு தள்ளிய புகழ்

விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது. இந்நிலையில் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்து முதல் 5 இடங்களைப் பிடித்த பிரபலங்களை பார்க்கலாம்.

புகழ் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து ரசிகர்களை கவர்ந்தவர் புகழ். இந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு தற்போது வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் தொடர்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் சில வாரங்கள் மட்டும் வந்து செல்கிறார். ரசிகர்கள் மனம் கவர்ந்தவர்களில் புகழ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பிரியங்கா : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பிரியங்கா. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். தற்போது மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் non-fiction பிரிவில் பிரியங்கா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

சிவாங்கி : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. இதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி கோமாளியாக பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சி மூலம் இவர் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். இப்போது டிஆர்பியில் சிவாங்கி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

மாகாபா ஆனந்த் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குபவர் மாகாபா. தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவருடைய நகைச்சுவைக் கலந்த பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தற்போது மாகாபா ஆனந்த் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

கோபிநாத் : விஜய் டிவியில் ஞாயிறுதோறும் மதியம் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ நீயா நானா. பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இது ஒரு விவாத நிகழ்ச்சி ஆக உள்ளது. இந்நிலையில் கோபிநாத்துக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை