மகேந்திரனின் மறக்க முடியாத 5 எவர்கிரீன் படங்கள்.. ரஜினிக்கு மட்டுமே 3 சூப்பர் ஹிட்

விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் அனைவரையும் பிரமிக்க செய்தவர் மகேந்திரன். இவர் ஆரம்பத்தில் தன்னுடைய இயக்கத்தின் மூலம் பல படைப்புகளை கொடுத்துள்ளார். அதில் ரஜினிக்கு 3 சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அவ்வாறு மகேந்திரன் இயக்கத்தில் மறக்க முடியாத 5 படங்களை பார்க்கலாம்.

முள்ளும் மலரும் : மகேந்திரன் முதல் முதலாக இயக்கிய படம் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜினிகாந்த், ஷோபா, சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். முள்ளும் மலரும் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினியின் குருநாதர் கே பாலச்சந்தர் எனக்கு இன்னொரு ரஜினியை காண்பித்தார் மகேந்திரன் என பாராட்டினார்.

உதிரிப்பூக்கள் : காலத்தால் அழியாத படங்களில் ஒன்றுதான் உதிரிப்பூக்கள். இப்படம் மகேந்திரன் இயக்கத்தில் சந்திரபாபு, அஸ்வினி மற்றும் பலர் நடிப்பில் வெளியானது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். உதிரிப்பூக்கள் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஜானி : ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் 1980 இல் வெளியான திரைப்படம் ஜானி. இப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மேலும் ரஜினிக்கு இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

நெஞ்சத்தைக் கிள்ளாதே : மகேந்திரன் இயக்கத்தில் மோகன், சுகாசினி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சத்தை கிள்ளாதே. அண்ணன் அரவணைப்பில் இருக்கும் ஒரு பெண் தனக்கு விருப்பமில்லை என்றாலும் அண்ணனுக்காக திருமணம் செய்து கொள்கிறார். பின்பு அவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதை. சுவாரசியத்துடன் நகரம் இக்கதை ரசிகர்களை கவர்ந்தது.

கை கொடுக்கும் கை : மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் ரேவதி நடிப்பில் 1984 இல் வெளியான திரைப்படம் கை கொடுக்கும் கை. இப்படத்தில் காளிமுத்தாக ரஜினியும், அவரது மனைவி சீதாவாக ரேவதியும் நடித்திருந்தனர். இப்படத்தில் ரேவதி பார்வையற்றவராக நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்