வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இளசுகளின் தூக்கத்தை கெடுத்த குஷ்புவின் 5 படங்கள்.. இவங்களுக்கு கோவில் கட்டியது தப்பே இல்ல

குஷ்பூ முன்னணி நடிகையாக இருந்ததைக் காட்டிலும் இப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அதாவது தன் உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் சின்னதம்பி படத்தில் நடித்த நந்தினி போலவே காட்சி அளிக்கிறார். இந்நிலையில் முதல் முதலாக ரசிகர்கள் நடிகை குஷ்புகாக கோயில் கட்டினர். அவ்வாறு செய்யக் காரணமாக இருந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த குஷ்புவின் ஐந்து படங்களை பார்க்கலாம்.

வருஷம் 16 : நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக வருஷம்16 படத்தில் குஷ்பூ நடித்திருந்தார். இப்படத்தில் இளமை ததும்ப அழகுடன் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்திருந்தார். மேலும் தற்போது வரை குஷ்பு ரசிகர்கள் ஃபேவரட் படமாக வருஷம்16 படம் உள்ளது.

சின்னதம்பி : பிரபு மற்றும் குஷ்பு காம்போவில் வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். அந்த வகையில் இவர்களது கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சின்ன தம்பி. குஷ்பூ ரசிகர்களை தீவிர ரசிகராக மாற்றிய படம்தான் இது. அண்ணன்கள் பாசத்திற்கு அடிமையாக இருந்த குஷ்பூ பிரபுவின் காதலுக்காக பரிதவிக்கும் காட்சிகள் பலரையும் கண்ணீர் வரச் செய்தது.

நடிகன் : பி வாசு இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பூ நடிப்பில் வெளியான திரைப்படம் நடிகன். இப்படத்தில் குஷ்பூ கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் குஷ்புவின் கெட்டப், நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் நடிகன் படம் நூறு நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.

சிங்காரவேலன் : கமல், குஷ்பூ கூட்டணியில் வெளியான திரைப்படம் சிங்காரவேலன். இப்படத்தில் தனது மாமா மகளை அடையாளம் கண்ட திருமணம் செய்து கொள்ளவேண்டும் என பட்டணத்திற்கு வருகிறார் கமல். குஷ்பூ தான் அந்தப் பெண் என தெரிந்தவுடன் அவர் மீது காதல் கொள்கிறார். இப்படத்தில் திமிரான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றார் குஷ்பூ.

மைக்கேல் மதன காமராஜன் : கமல் நான்கு வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படத்தில் குஷ்பூ ஷாலினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் குஷ்புவின் நடனம், நடிப்பு என அனைத்தும் பலராலும் பாராட்டப்பட்டது.மேலும் ஊர்வசி, ருபினி எனப் பல நடிகைகள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

- Advertisement -

Trending News