இணையத்தை தெறிக்க விடும் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. கடும் போட்டியாளராக மாறிய ஜீ தமிழ்

ஒவ்வொரு வாரமும்  ரசிகர்கள் மத்தியில் எந்த சீரியலானது அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது, என்ற தகவல் ஆனது அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அதிலும் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களுக்கு போட்டியாக தற்பொழுது ஜீ தமிழ் சீரியல்களும் களமிறங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் ஆனது தற்பொழுது இணையத்தில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

இதில் 10-வது இடத்தில் கார்த்திகை தீபம் சீரியலும், 9-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், 8-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம்பிடித்துள்ளது.

மிஸ்டர் மனைவி: இந்த சீரியலில் திருமணத்தை விட தனக்கு வேலை தான் முக்கியம் என இருக்கும், கதையின் நாயகிக்கு தற்பொழுது காதல் பூவானது மலர தொடங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும், இந்த சீரியலானது ரசிகர்களின் ஃபேவரிட் சீரியலாகவே மாறி வருகிறது. மிஸ்டர் மனைவி சீரியலானது அசுர வேகத்தில் முன்னேறி இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: கன்னத்தை பழுக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி.. தம்பி செஞ்ச வேலைக்கு இது பத்தாது

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் பணத்திற்காக எதையும் செய்ய தயங்காத குணசேகரன் ஆதிராவின் திருமணத்தில் பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார். ஆதிரா என்னும் தூண்டிலை போட்டு அப்பத்தாவிடம் இருக்கும் சொத்தை எப்படியாவது, கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார் குணசேகரன். ஆனால் இந்த சூழ்ச்சி வலையில் சிக்கப் போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதிர்நீச்சல் சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தில் உள்ளது.

சுந்தரி: இந்த சீரியலில் கார்த்திக், அணு திருமணம் சுந்தரியின் அம்மாவிற்கு தெரிந்த நிலையில் பிரச்சனையானது பூதாகரமாக வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் இன்னும் யாரையெல்லாம் சமாளிக்க போகிறாரோ என்ற நிலையில் இந்த சீரியலானது சென்று கொண்டிருக்கிறது. சுந்தரி சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

இனியா: இந்த சீரியலில் எப்படியோ பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு திருமணம் நடந்துள்ளது. ஆனால் அதன் சந்தோஷம் ஒரு நாள் கூட நீடிக்காமல் தற்பொழுது, ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் பல்வேறு அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. அதிலும் விக்ரமின் அத்தைகள் எப்படியாவது இனியா மற்றும் யாழினி இவர்கள் இருவரையும், வீட்டை விட்டு துரத்துவதிலேயே குறியாக இருந்து வருகின்றனர். இனியா சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தில் உள்ளது.

Also Read: குணசேகரன் மாட்டிக் கொண்டு முழிக்கும் தருணம்.. ஜான்சிராணி இடம் சிக்குவாரா?

வானத்தைப்போல: இந்த சீரியலில் வெற்றியின் அராஜகத்தில் இருந்து  துளசி எப்படியோ தனது கணவரை ஆபத்தின் பிடியிலிருந்து மீட்டு உள்ளார். இது ஒரு புறம் இருக்க சின்ராசுவை மறைமுகமாக காதலித்து வரும் பொன்னி அதனை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டி வருகிறார். இப்படி பரபரப்பான கட்டத்தில் சென்று கொண்டு இருக்கும் வானத்தைப்போல சீரியல் ஆனது, இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

கயல்: இந்த சீரியலில் நீண்ட நாட்களாக கயலின் மனதில் புதைந்து இருந்த காதலை எழில் எப்படியோ தெரிந்து கொண்டுள்ளார். தற்பொழுது அதனை மனதில் வைத்துக் கொண்டு ஓவராக கெத்து காட்ட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்குள் எப்பொழுது ரொமான்ஸ் சீன் நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். கயல் சீரியலானது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: புது சீரியல் என்ட்ரியால் பாய் பிரண்டுடன் ஓவர் நெருக்கம் காட்டும் ஆல்யா.. அம்மணி சிக்கும் அடுத்த சர்ச்சை

இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்களே முதல் 6 இடங்களையும் ஆக்கிரமித்து கெத்து காட்டி வருகிறது. அதிலும் விஜய் டிவி மற்றும் சன் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழில் சீரியல்கள் ஆனது டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்து களத்தில் இறங்கியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்