ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

30 ஆண்டுகளுக்கு முன்பு டாப் 10 நடிகைகள் வாங்கிய சம்பளம்.. குஷ்புவை விட ஆறு மடங்கு ஜாஸ்திய வாங்கிய விஜயசாந்தி

இந்திய சினிமாவை பொறுத்த வரையிலும் டாப் நடிகைகளாக இருக்கக்கூடியவர்கள், தற்பொழுது ஒரு படத்திற்காக மட்டும் கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் 90ஸ் களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு மிகவும் பிரபல நடிகைகளாக வலம் வந்தவர்கள், நடிகர்களை விடவும் மிகக் குறைவாகத்தான் சம்பளமாக பெற்றுள்ளனர். அதிலும் குஷ்புவையே ஓரங்கட்டி முதல் இடத்தை பிடித்துள்ளார் விஜயசாந்தி. அப்படியாக டாப் 10 நடிகைகள் 30 வருடங்களுக்கு முன், எவ்வளவு தொகையை சம்பளமாக பெற்றுள்ளனர் என்ற பட்டியலானது தற்பொழுது வெளியாகி உள்ளது.

அர்ச்சனா: தனது நடனத்தின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் அர்ச்சனா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் இரண்டு முறை, தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முப்பது வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் 75 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கியுள்ளார்.

ரேகா: நடிகர் ராமராஜன் உடன் பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை ரேகா. மேலும் தமிழில் கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமான நடிகையாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து வில்லி  கதாபாத்திரங்களிலும் தெறிக்க விட்டிருப்பார். அதிலும் 30  வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் 75 ஆயிரம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

Also Read: படத்திற்கு குஷ்பூ சீன் தான் முக்கியம்.. வாரிசு பட எடிட்டரின் பரபரப்பான பேட்டி

நிரோஷா: எம் ஆர் ராதாவின் வாரிசு நடிகையாக சினிமாவில் கால் பதித்தவர் தான் நடிகை நிரோஷா. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் சின்னத்திரையிலும் அறிமுகமாகி மாஸ் காட்டியுள்ளார். நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்ட இவர் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் 1 லட்சம் வரை சம்பளமாக வாங்கியுள்ளார்.

சில்க் ஸ்மிதா: சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. வினு சக்கரவர்த்தியின் வண்டிச்சக்கரம் என்னும் படத்தில் சாராயம் விற்கும் பெண்ணாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிலும் எக்கச்சக்கமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் 30 ஆண்டுகளுக்கு முன் 1 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

ரூபினி: ஹிந்தியில் அமிதாபச்சனின் மிலி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 90களில் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரூபினி. இவர் ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார். அதிலும் 30 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் இவர் ஒரு லட்சம் வரை சம்பளமாக பெற்று வந்துள்ளார்.

Also Read: ரேவதி நடிப்பில் ஹிட்டான 6 படங்கள்.. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் மொத்த லிஸ்ட்

கௌதமி: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சத்யராஜ் போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் கௌதமி. பிரபல நடிகையாக வலம் வந்த இவர் தற்பொழுது குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதிலும் 30 ஆண்டுகளுக்கு முன் 1,50,000 வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

பானுப்ரியா: தனது நடனத்தின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை பானுப்ரியா. இவர் பல மொழிகளில் 111 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிலும் மெல்ல பேசுங்கள் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதிலும் தனது கண்களாலே கவர்ந்து இழுக்கக்கூடிய இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தனர். மேலும் 30 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் இவர் 2 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

ரேவதி: தமிழில் மண்வாசனை என்ற படத்தின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை ரேவதி. தனது வசீகர முகத்தினை கொண்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் என்றே சொல்லலாம். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற ஐந்து மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இவர் பிரபலமாக இருந்த பொழுது 30 ஆண்டுகளுக்கு முன் 3 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

குஷ்பூ: 90களில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவரின் நடிப்பிற்காகவே கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாகவே வலம் வந்தார். அதிலும் இவர் சினிமாவில் 30 வருடங்களுக்கு முன் பிரபலமாக இருக்கும் பொழுது 3 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

விஜயசாந்தி: சினிமாவில் அதிரடியான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை தான் விஜயசாந்தி. அதிலும் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்த இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில், 30 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில்  இவர் 20 லட்சம் வரை சம்பளமாக பெற்று முதல் இடத்தில்  இருந்துள்ளார்.

Also Read: சில்க் ஸ்மிதாக்கு போட்டியாக வந்த கிளாமர் நடிகை.. இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து வந்த பரிதாபம்

- Advertisement -

Trending News