ரக ரகமாய் அக்ரிமெண்ட் போடும் H.வினோத்.. அஜித்துக்கு தான் முதல் மரியாதைன்னு எஸ் கேக்கு போட்ட கேட்

சிவகார்த்திகேயன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து கவனமாய் வைத்து வருகிறார். அமரன் படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டார் இப்பொழுது ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் இயக்குனரை தேடி வருகிறார்.

சும்மா புது இயக்குனர்களுக்கு எல்லாம் கால் சீட் கொடுத்து விட முடியாது என யார் படத்திற்கு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு இருக்கிறதோ அந்த மாதிரி இயக்குனர்களை தேடி வருகிறார். இப்பொழுது எச் வினோத்திடம் அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருகிறார். ஆனால் வினோத் மிகவும் பிசியாக இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் படத்திற்கு சம்மதம் தெரிவித்த வினோத் ரக ரகமாய் அக்ரிமெண்ட் போட்டு எஸ் கேவை திக்கு முக்காட வைத்திருக்கிறார். ரொம்ப தெளிவாக வினோத் ஒரு அக்ரிமெண்டை போட்டுள்ளார். ஏற்கனவே அவர் தளபதி 69 படத்திற்காக கதையை ரெடி பண்ணி வருகிறார்.

அஜித்துக்கு தான் முதல் மரியாதைன்னு எஸ் கேக்கு போட்ட கேட்

விஜய் 69 படத்தை முடித்த பின்பு தனுஷ் உடன் ஒரு படம் பண்ணுகிறாராம் அதன் பின் தான் சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ணப் போகிறார் எச் வினோத். இதற்கு இடையில் அவர் போட்ட அக்ரீமெண்ட் தான் சிவகார்த்திகேயனுக்கு தலைவலியாய் அமைந்துள்ளது.

தனுஷ் படத்தை முடித்த பிறகு அஜித் கூப்பிட்டால் அஜித் படம் இயக்குவதற்கு சென்று விடுவாராம் வினோத். அப்போது எஸ்கே வின் கதை அந்தரத்தில் தான் தொங்கி கொண்டு இருக்கிறது. அஜித்துக்கு தான் முதல் உரிமை கொடுக்கிறார் வினோத். அனேகமாக சிவகார்த்திகேயன் மற்றும் ஹச் வினோத் இணையும் படம் இரண்டு வருடங்கள் கழித்து தான் டேக் ஆப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

- Advertisement -