அட்டர் ஃப்ளாப்பால் மோசம் போன அக்கட தேசத்து நடிகர்.. அஜித், சூர்யா பட இயக்குனர் காட்டிய பந்தா!

Ajith-Suriya: தன் நடிப்பை கொண்டு எப்படியாவது தமிழில் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கிய வரை ஓட்டம் எடுக்க வைத்து இயக்குனர் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

அஜித்தின் நடிப்பில் வெளிவந்த தீனா, சூர்யாவின் நடிப்பில் வெளிவந்து வெற்றி கண்ட கஜினி போன்ற படங்களை இயக்கியவர் தான் ஏ ஆர் முருகதாஸ். ஒரு காலகட்டத்தில் பிரபல இயக்குனர் என பேசப்பட்ட இவரை நம்பி தமிழில் எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் நடிக்க ஆசைப்பட்ட வந்தவர் தான் டோலிவுட் நாயகன் மகேஷ் பாபு.

Also Read: நடிக்க தெரியலன்னு சிம்பு படத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட நயன்தாரா.. ரெண்டு ஹிட் கொடுத்து மூக்கு உடைத்த சம்பவம்

விஜய், அஜித் போன்ற பிரபலங்களின் படங்களில் எப்படியாவது நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்பது அவரின் கனவாம். அதுவும் குறிப்பாக அஜீத், சூர்யா, விஜய் போன்றவர்களின் படம் வெளியே வருகிறது என்றால் அவற்றை முதல் நாளே ஃபர்ஸ்ட் ஷோவில் பார்த்து விடுவாராம்.

அந்த அளவிற்கு தீவிர ரசிகனாக இருந்து தமிழில் தன் திறமையை வெளிக்காட்டிட வேண்டும் என்பதற்காக ஏ ஆர் முருகதாஸ் இடம் வாய்ப்பு பெற்று நடித்த படம் தான் ஸ்பைடர். இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு பெரிதாக பார்க்கப்பட்டதே தவிர படம் அட்டர் ஃப்ளாப்பாய் மாறியது.

Also Read: பாலச்சந்தர், இளையராஜா காம்போவில் வெற்றி கண்ட 5 படங்கள்.. ஈகோவால் துண்டு துண்டாய் போன பந்தம்

இந்த படத்தில் ஏற்பட்ட தோல்வியை கொண்டு தமிழ் சினிமா பக்கம் தலை வைத்து படுக்காமல் முழுதாய் முழக்கு போட்டு விட்டு சென்று விட்டார் மகேஷ் பாபு. அவ்வாறு தமிழில் நடிக்க ஆசைப்பட்டு வந்த இவருக்கு சரிவர கதை அமைக்க தவறிவிட்டார் ஏ ஆர் முருகதாஸ்.

அது மட்டுமல்லாமல் சமீப காலமாய் இவர் மீது நிறைய புகார் வந்த வண்ணம் இருக்கிறது. வேறொருவர் கதையை காப்பியடித்து தன் படத்திற்கு உபயோகிப்பது போன்ற கம்ப்ளைன்ட்கள் இவர் மீது இருந்து வருகிறது. இதற்கு முன்னரே ஒரு முறை கத்தி படத்திற்கு இது போன்ற பிரச்சனையை சந்தித்தார் ஏ ஆர் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 5 பெரிய ஹீரோக்களுக்கு மரண ஹிட் கொடுத்த பி வாசு.. அப்பாவியான பிரபுவுக்கு 365 நாட்கள் ஓடிய படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்