வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

3 மடங்கு சம்பளம்.. லோகேஷ்கு பெட்டி பெட்டியாக வாரி இறைக்கும் தயாரிப்பாளர்கள்

சினிமாவில் சிலருக்கு நல்ல நேரம் வந்துவிட்டால் எட்டாத உயரத்திற்கு செல்கின்றனர். அப்படி ஒரு சில படங்களில் மட்டுமே இயக்கினாலும் முன்னணி இயக்குனராக தற்சமயம் வலம் வந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் விக்ரம். ரிலீஸ் ஆன நாள் முதல் எந்தவித நெகட்டிவ் கமெண்ட்டுகளையும் பெறாமல் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று, 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறது.

இதனால் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. வெற்றி வந்தவுடன் பலரும் தங்களது சம்பளத்தை ஏற்றி விடுவார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் பணத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை அவருக்கு படத்தை இயக்குவது தான் முழு கவனமாக இருக்கிறது.

அந்த அளவிற்கு சினிமாவை நேசித்து வேலை பார்த்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படங்களில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர் நடிகைகளும் ஆவலாக உள்ளனர். அதைப்போல் தயாரிப்பாளர்களும் லோகேஷ்சை வைத்து படத்தை இயக்குவதற்காக வரிசைகட்டி நிற்கின்றனர்.

லோகேஷ் தற்போது ரசிகர்கள் எதிர்பார்க்கும் கதைக்களத்தை வைப்பதால் ஜெயிக்கிறார். அதாவது நடிகர்களுக்கான கதை எழுதாமல் கதைகளை தேர்வு செய்து இயக்கி வருகிறார். அதனால்தான் இவரது படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது.

அடுத்து விஜய் வைத்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ்-க்கு 35 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்க கூடிய படங்களுக்கும் சம்பளத்தை வாரி இறைக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்கு பிறகு மற்ற படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். விக்ரம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படமான தளபதி 67 படத்தை விக்ரம் படத்தை விட ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டுமென வெறித்தனமாக இறங்கி வேலை செய்துகொண்டிருக்கிறார்.

- Advertisement -

Trending News