லலித் முகத்திரையை கிழிக்கும் திருப்பூர் சுப்ரமணியம்.. ஆதாரத்துடன் வரப்போகும் ஆப்பு

Lalith-Leo: லியோ படம் வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஒரு பக்கம் லோகேஷின் தலையை மீடியாக்கள் உருட்டி வரும் நிலையில் திரையரங்கு சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தயாரிப்பாளர் லலித்தை ஒரு வழியாக்கி கொண்டிருக்கிறார். அதிலும் தற்போது அவர் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் சொல்லி இருக்கும் விஷயம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது லலித் 80% லாபத்தை தியேட்டர் உரிமையாளர்களிடமிருந்து லியோவுக்காக வாங்கியது தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணமாக இருக்கிறது. இதை பற்றி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வரும் திருப்பூர் சுப்பிரமணியன் லியோ பாக்ஸ் ஆபிஸ் மோசடி பற்றியும் கூறி பகீர் கிளப்பி இருந்தார். அதற்கு லலித் ஒரு விளக்கத்தையும் கொடுத்திருந்தார்.

இப்படி இருவரும் மாறி மாறி முட்டிக்கொண்ட நிலையில் திருப்பூர் சுப்பிரமணியன் ரஜினியின் சிவாஜி படத்தை விநியோகம் செய்த போது 70% தான் வாங்கியதாக கூறியிருக்கிறார். மேலும் மாஸ்டர் பீஸ் வெற்றி படமான அதற்கே அவ்வளவுதான் வாங்கினேன். இத்தனைக்கும் ஏவிஎம் சரவணன் ஒரு பைசா கூட வாங்காமல் படத்தை தூக்கி கொடுத்தார்.

அவ்ளோ பெரிய படத்துக்கே 70 தான் வாங்கினேன். ஆனால் லியோவுக்கு லலித் 80% கேட்கிறார். அதுவும் 40 தியேட்டர்களில் மட்டுமே இதைக் கேட்டதாக அப்பட்டமாக பொய் சொல்கிறார். நாளைக்கே நான் மொத்த தியேட்டர் லிஸ்ட்டையும் வெளியிடுகிறேன் என்று அவர் ஆவேசத்துடன் சவால் விட்டிருக்கிறார். மேலும் உதாரணத்திற்கு சேலத்தில் மட்டுமே 40 தியேட்டருக்கு மேல் லலித் வாங்கி இருக்கிறார்.

அப்படி இருக்கும்போது மொத்த தமிழ்நாட்டையும் கணக்கிட்டால் அவரின் முகத்திரை வெட்ட வெளிச்சமாகி விடும் என திருப்பூர் சுப்பிரமணியன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் பல உண்மைகள் வெளிவரும் என்றும் தெரிகிறது. இது ஒரு புறம் இருக்க லியோவின் விநியோக உரிமை கிடைக்காத கடுப்பில் தான் இதுபோன்ற செய்திகளை அவர் வெளியிடுகிறார் என்ற செய்தியும் பரவுகிறது.

ஆனால் இது அத்தனைக்கும் ஆதாரம் இருப்பதாக கூறும் திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு சில நாட்களில் அதை வெளியிட போவதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே லலித் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டு இருக்கிறது. லோகேஷுக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுத்ததனாலேயே லியோ சில இடங்களில் தடுமாறியதாக ஒரு பேச்சு இருக்கிறது. இதில் இந்த விவகாரமும் லியோவுக்கு எதிரான ஆயுதமாக திரும்பி உள்ளது.

Next Story

- Advertisement -