செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பிக்பாஸின் வருகையால், குளறுபடியான சீரியல்கள்! கலக்கத்தில் பாரதிகண்ணம்மா ரசிகர்கள்!

தற்போது விஜய் தொலைக்காட்சியின் முக்கிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தனது ஐந்தாம் சீசனின் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்த நிகழ்ச்சி அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடிகர் கமலஹாசன் நிகழ்ச்சி தொகுத்து வழங்க உள்ளார்.

இதுவரை ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன்கள் அனைத்தும் 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகியுள்ளது. பொதுவாகவே பிரைம் நேரத்தில் ஒளிபரப்பப்படும் நாடகம் அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கும்.  அதன் அடிப்படையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 8 மணிக்குமேல் துவங்குவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நேரத்தை மாற்றினால் பாரதிகண்ணம்மா சீரியல் இடம் மாற்றப்படும். இதனால் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் கெடாத வண்ணம் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி மற்றும் ஞாயிறுகளில், பிக் பாஸ் நிகழ்ச்சியில், கமல்ஹாசன் இடம்பெறக் கூடிய எலிமினேஷன் சீன்கள் ஆனது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும். இச்சூழ்நிலையில், தற்போது விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விஜே ஜாக்குலின் கதாநாயகியாக நடித்து வந்த தேன்மொழி பிஏ இம்மாத இறுதிக்குள் முடிவடைய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

bharathi-kannamma-cinemapettai
bharathi-kannamma-cinemapettai

அதுமட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியால், விஜய் தொலைக்காட்சியில் இரவு நேரங்களில் இதர ஷோக்களும் ஒளிபரப்பப்படலாம் என்றும் அனைத்து நாடகங்களும் திங்கள் முதல் வெள்ளி வரை நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பப்படும் என்றும் தகவல் வெளியாகி வருகின்றன.

அத்துடன் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தில் இருக்கும் நாடகங்கள் சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிபரப்பாகாது என்றும், அதற்கு பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News