துணிவுக்கு தண்ணி காட்டும் வாரிசு விஜய்.. கூட்டி கழிச்சு தயாரிப்பாளர் போட்ட 1000 கோடி கணக்கு

AK, தளபதி நடிப்பில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு. இந்த இரண்டு படங்களும் பொங்களுக்கு வெளியாவதாக இருந்தது. இப்பொழுது அதில் அதிரடி மாற்றங்கள் பல நடந்துள்ளது.

ஏற்கனவே துணிவு படத்தில் ரோப் சீன்கள் நிறைய இருக்கிறதாம். அதையெல்லாம் கட் செய்து முழுமையாக கொண்டுவர நிறைய நாட்கள் எடுக்கும் என்று துணிவு படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் ஏற்கனவே புலம்பி வந்துள்ளார். இதனால் பொங்கலுக்கு துணிவு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Also Read: வாரிசை பார்த்து பின்வாங்கும் நிலைமையில் அஜித்தின் துணிவு.. உருளும் வினோத்தின் தலை

இருந்தாலும் அஜித் எப்படியாவது பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆரம்பத்திலிருந்தே இந்தப்படத்தின் அறிவிப்பு உட்பட படப்பிடிப்பு அனைத்துமே தாமதமான நிலையில், படம் நிச்சயம் பொங்கலுக்கு ரிலீசாகும் என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் இப்போது இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் வெளியிட்டால் சில பிரச்சனைகள் வரும் என்று ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஒரு பிளான் போட்டு வருகிறது. அதாவது வாரிசை பொங்கலுக்கு வெளியிட்டு, துணிவு படத்தை ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமன்று வெளியிட ஒரு திட்டம் போட்டு வருகிறது. அஜித்திற்கு வியாழக்கிழமை லக்கியான நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்துள்ளது படக்குழு.

Also Read: சுத்தியலுடன் சூறையாட வந்த வாரிசு பட போஸ்டர்.. கருப்பு உடையில் மிரட்டும் விஜய்

இதற்கு தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர்களிடம் இருந்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி தளபதியின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும், தல ரசிகர்களுக்கு திண்டாட்டமாக அமைந்துள்ளது.

ஆனால் அஜித் நிச்சயம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் போட்ட இந்த நரி தந்திர வேலைக்கு வளைந்து கொடுக்கமாட்டார். ஏனென்றால் பொங்கலுக்கு அவருடைய ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவே அடித்துப்பிடித்து அன்றைய தினத்தில் தான் ரிலீஸ் செய்ய பார்ப்பார். ஆனால்  தளபதி மற்றும் அஜித்தை வைத்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யவேண்டும் என்று கணக்குப்போட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: 40 வருடங்களாக நிலைத்து நின்ற தயாரிப்பு நிறுவனம்.. ஒரே படத்தால் சோலியை முடித்த அஜித்

Next Story

- Advertisement -