துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்.. ஆட்டநாயகன் என நிரூபித்த அஜித்

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்தப் படம் பேங்க் ராபரியே மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இது திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கான பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்தப் படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாய் இருந்து வந்தன. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக மக்கள் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து வந்தனர். தற்பொழுது இதற்கான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தமிழ்நாட்டில் மட்டும் 104.25 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக வெளிவந்துள்ளது.

Also read: துணிவு, வாரிசை விரட்டி அடிக்க போகும் சாமி படம்.. கோலாகலமாக ரிலீசாக போகும் பேன் இந்தியா படம்.

பொதுவாகவே கேரளாவில் எப்பொழுதுமே விஜய்க்கு ஒரு மவுஸ் இருந்து வருகிறது. அந்த வகையில் அஜித் படமான துணிவு படத்திற்கு தற்பொழுது கேரளாவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் விளைவாக கேரளாவில் துணிவு படத்திற்கு 3.78 கோடி வசூல் கிடைத்துள்ளதாக வெளியாகி உள்ளது.

பொங்கலை ஒட்டி ஆந்திராவில் மிகப்பெரிய நடிகர்களான பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி படங்கள் வெளியாகின. அதனுடன் ஆந்திராவில் துணிவு படமும் ரிலீஸ் ஆகி 4.08 கோடி வசூல் செய்தது. மேலும் கர்நாடகாவில் 12.78 கோடி என வசூல் செய்துள்ளது. இது தவிர இந்தியாவின் மற்ற இடங்களில் 1.92 கோடி வசூலித்துள்ளது.

Also read: ரொமான்டிக் ஹீரோவை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய 6 படங்கள்.. ஆக்சன் படங்களில் முன்னணியாக வந்தவர்

துணிவு படம் வெளிநாடுகளில் பல சர்ச்சைகளில் சிக்கி ரிலீஸ் செய்வதற்கு தடையாக இருந்தது. இந்த தடைகள் எல்லாம் தாண்டி இப்பொழுது வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொழுது வெளிநாடுகளில் உள்ள கலெக்ஷன் இந்த படத்திற்கு 51.85 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த படம் ரிலீஸ் ஆகி 14 நாட்களில் மொத்தமாக 178.73 கோடி வசூல் சாதனை செய்து வருகிறது. இதுவரை அஜித்திற்கு எந்த படங்களிலும் கிடைக்காத வரவேற்பும், வசூலும் இந்த படத்திற்கு கிடைத்து வருகிறது. இந்த வசூலின் மூலம் தன்னை ஆட்டநாயகனாக நிரூபித்த அஜித், இன்னும் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஆடிக் கொண்டிருக்கிறார்.

Also read: 3-வது முறையாக அஜித் செய்த சாதனை.. உலக அளவில் வசூலில் மிரட்டிய துணிவு

Next Story

- Advertisement -