பிழைப்புக்காக திரித்து பேசுவாங்க.. வெளுத்து வாங்கிய துணிவு பட இயக்குனர் எச்.வினோத்

h-vinoth
h-vinoth

மாஸ் ஹீரோக்களின் படம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இந்த வரிசையில் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் படத்தின் போஸ்டர் லுக் வெளியாகி ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

போஸ்டரில் அஜித்குமார் கையில் மாஸாக துப்பாக்கி வைத்திருப்பதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்கள். துணிவு படத்தின் இயக்குனர் வினோத் அவர்கள் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் மாஸ் ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் பொழுது அவர்களுக்கு ஏற்றார் போல கதைக்களம் அமைந்திருக்கும்.

Also Read: அச்சு அசலாக அஜித் போல இருக்கும் டூப்.. வைரலாகும் புகைப்படம்

ஆனால் இக்காலத்திற்கு நல்ல கதை மட்டும் போதாது. அதை மக்கள் மனதில் எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே முக்கியம். பார்வையாளர்கள் ஒரு பாசிட்டிவான எண்ணத்துடன் படத்தை பார்க்கிறார்களா என்பதை பொறுத்தே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. உதாரணமாக பொன்னியின் செல்வன், விக்ரம் போன்ற படங்களின் வெற்றி.

பாக்ஸ் ஆபீஸ் தொடர்பான பேச்சுக்கள் மாஸ் ஹீரோக்களின் படங்களில் தான் அதிகம் இருக்கும். அதுவும் அவர்களுடைய படங்கள் வெளியாகும் நாட்களை பொறுத்து மாறுபடுகிறது. விடுமுறை நாட்களிலும் விடுமுறை அல்லாத நாட்களிலும் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக ஏற்ற இறக்கங்களை சந்திக்கின்றது. இவ்வாறு பாக்ஸ் ஆபீஸில் வலிமை படம் பிப்ரவரி மாதம் வெளியாகி தமிழ் படங்களிலேயே அதிக வசூலை குவித்தபடமாக திகழ்ந்து வருகிறது, பாக்ஸ் ஆபீஸில் வசூலைப் பற்றி பேசுபவர்கள் இதுபோன்ற காரணங்களை பேசுவதில்லை.

Also Read: துணிவு அயோக்கியர்களில் ஆட்டம்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட ஹெச் வினோத்

ஒரு திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீசை பலரும் தங்களது பிழைப்புக்காக திரித்து பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். யூடியூப் சேனல்கள் மற்றும் டிக் டாக், ட்விட்டர் வரை அனைவரும் இதை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களை குறை சொல்லி திருத்த முடியாது. பார்வையாளர்களுக்கு தான் ஒரு திரைப்படத்தின் வெற்றி தொடர்பான புரிதல் வேண்டும். எப்படி என்றால் ஒரு படத்தின் வெற்றி தோல்வி என்பது அந்த படத்தில் பணியாற்றிய கூட்டணி மீண்டும் வேறு ஒரு படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்பதை வைத்துதான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அஜித் தன்னுடன் நடிக்கும் சக மனிதர்களிடம் மரியாதையாக நடப்பதுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜூனியர் ஆர்டிஸ்ட் தொடங்கி அனைவரும் மரியாதைக்குரிய விதத்தில் நடக்கிறார்களா என்பதையும் கூர்ந்து கவனிப்பாராம். மேலும் அரசியல் சார்ந்த எந்த விஷயத்திலும் தலையிட மாட்டார் மற்றும் அதில் கவனத்தையும் செலுத்த மாட்டாராம்.

Also Read: அக்ரீமெண்ட் போடும் முன்பே அடித்துக் கொள்ளும் கூட்டம்.. வாரிசு, துணிவு வைத்திருக்கும் ட்விஸ்ட்

Advertisement Amazon Prime Banner