புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

டிஆர்பி-யில் முதல் 3 இடங்களை தட்டிச் சென்ற சன்டிவி.. பரிதவிக்கும் விஜய் டிவி

சின்னத்திரை ரசிகர்கள் அனுதினமும் ஆர்வத்துடன் பார்க்கும் சீரியல்களை கொண்டு ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து முதல் இடத்தை சன் டிவியின் கயல் சீரியல் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

இதில் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் சீரியல் பிரபலம் சஞ்சீவ் கதாநாயகனாகவும்,  ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக கலக்கிய சைதன்யா ‘கயல்’ சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். எனவே சைதன்யா மற்றும் சஞ்சீவ் இருவரின் கெமிஸ்ட்ரி இந்த சீரியலில் பக்காவாக ஒர்க்கவுட் ஆகியிருப்பது டிஆர்பி ரேட்டிங் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் இந்த சீரியல் துவங்கப்பட்ட சில வாரங்களிலேயே மிகப் பெரிய வெற்றி கிடைத்து கொண்டிருப்பதால், சீரியல் குழுவினர்கள் துள்ளிக் குதிக்கின்றனர். அத்துடன் டிஆர்பி-யில் இரண்டாவது இடத்தை சன்டிவியின் வானத்தைப்போல சீரியலும், மூன்றாவது இடத்தை சுந்தரி சீரியலும் பெற்றுள்ளது.

எனவே தொடர்ந்து மூன்று இடத்தை தக்கவைத்துக் கொண்ட சன் டிவியை சமாளிக்க முடியாத விஜய் டிவி, நான்காவது இடத்தை பாரதிகண்ணம்மா சீரியலின் மூலம் பெற்றுள்ளது. தற்போது சண்டையுடன் கூடிய ரொமான்ஸ் காட்சிகளை காண்பிக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில், கதாநாயகி மாறினாலும் ரசிகர்கள் சீரியலை தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் சன் டிவியில் ரோஜா சீரியல் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. ரோஜா சீரியல் பொதுவாக முதலிடத்தை பிடித்துக் கொண்டிருந்த நிலையில், ‘கயல் சீரியல் வந்தபிறகு பின்னுக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி ஆறாவது இடத்தையும், ஏழாவது இடத்தை பாண்டியன்ஸ்டோர் பெற்றுள்ளது.

அத்துடன் சன் டிவியின் அபியும் நானும், கண்ணான கண்ணே, ராஜா ராணி2, தமிழும் சரஸ்வதியும் போன்ற சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் 13 ஆவது இடத்தை ஜீ தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்ற புத்தம் புது சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியின் பூவே உனக்காக சீரியல் அடுத்த இடத்தையும், அதன்பிறகு விஜய் டிவியில் மௌனராகம் 15 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

மேலும் 16வது இடம் ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை என்ற சீரியலும், அதைத்தொடர்ந்து நடிகை தேவயானி கதாநாயகியாக நடிக்கும் ஜீ தமிழில் புத்தம் புது அர்த்தங்கள் என்ற சீரியல் 17 வது இடத்தையும் பெற்றுள்ளது. இவற்றைத் தொடர்ந்து மெட்டிஒலி, செம்பருத்,தி சத்யா2, அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர்2 போன்ற சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தைப் பெற்று ரசிகர்களிடையே பிரபலமடைந்த கொண்டிருக்கிறது.

- Advertisement -

Trending News