திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இந்த வாரம் டிஆர்பி-யில் டாப் 6 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. ரேங்கிங் லிஸ்டில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல்

This week top 6 serials TRP ratings: கடந்த வருடத்தைப் போலவே இந்த வருட துவக்கத்திலும் டிஆர்பி-யில் பிரபல சேனல்கள் கடும் போட்டி போடுகின்றனர். அதுவும் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் எதிர்நீச்சல் சீரியலால் அதிரடி மாற்றமே ஏற்பட்டுள்ளது. இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 10-வது இடத்தில் விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியலும், 9-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலும், 8-வது இடத்தில் மகா சங்கமத்தில் இணைந்த பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் உள்ளது.

அதேபோல் 6-வது இடத்தில் பொங்கல் செலிப்ரேஷனை இன்னும் முடிக்காமல் ஆனந்த கொண்டாட்டத்தில் இருக்கும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் முத்து மற்றும் மீனா இருவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதேபோல் 5-வது இடத்தில் கலெக்டராக மாஸ் கொட்டி கொண்டிருக்கும் சன் டிவியின் சுந்தரி சீரியல் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக 4-வது இடத்தில் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை அழகாக காண்பிக்கும் வானத்தைப்போல சீரியல் இருக்கிறது. 3-வது இடம் கடந்த வாரம் சின்னத்திரை ரசிகர்களை கூடுதல் பரபரப்பாகிய எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியல் ரொம்பவே டல்லடித்ததால் டிஆர்பி-யில் பின்னுக்கு தள்ளப்பட்டு நான்காவது மற்றும் ஐந்தாவது இடம் தான் கிடைத்தது.

Also Read: டாம் அண்ட் ஜெரியாக இருந்த ராஜிவை திருமணம் செய்த கதிர்.. பாக்யா தலைமை நடந்த ரகசிய கல்யாணம்

டிஆர்பி-யில் டாப் இடத்தைப் பிடித்த சீரியல்கள்

ஆனால் இப்போதுதான் இந்த சீரியலில் இருக்கும் குட்டி வாண்டுகள் எல்லாம் குணசேகரனுக்கு எதிராக திரும்பி எதிர்நீச்சல் போடுவதால் இந்த வாரம் டிஆர்பி-யில் மூன்றாவது இடத்தை பிடித்து மாஸ் காட்டி உள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்தடுத்த வாரங்களில் முன்னேறி முதலிடத்தை பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இரண்டாவது இடம் சன் டிவியின் கயல் சீரியலுக்கும், முதல் இடம் சிங்கப்பெண்ணே சீரியலுக்கு கிடைத்துள்ளது. இதில் சில்வண்டு போல் இருக்கும் ஆனந்தியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தெடுத்துள்ளது. அதேபோல் இதில் ஒவ்வொரு நாளும் யூகிக்க முடியாத அதிரடி மாற்றத்தை இயக்குனர் காண்பிப்பதால், சிங்கப்பெண்ணே சீரியல்தான் தற்போது முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து டிஆர்பி-யில் மாஸ் காட்டுகிறது.

Also Read: ரோகினியின் மாமாவுக்கு ஊத்தி கொடுத்து உண்மையை வாங்க போகும் முத்து.. வடிகட்டின முட்டாளாக இருக்கும் விஜயா

Trending News