இணையத்தை கலக்கும் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. விட்டுக்கொடுக்காமல் போட்டி போடும் சன், விஜய் டிவி

முன்னணி சேனல்களின் அடிப்படையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது. அதிலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற மூன்று சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவும். ஆனால் இந்த முறை ஜீ தமிழ் ரேஸில் இருந்து விலகி விட்டது. ஆனால் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி விட்டுக் கொடுக்காமல் போட்டி போட்டு இருக்கின்றனர்.

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் எதிர்நீச்சல் சீரியலுக்கு பயங்கர டஃப் கொடுக்கும் வகையில் விஜய் டிவியின் புத்தம் புது சீரியலான சிறகடிக்கும் ஆசை என்ற தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, முதல் முறையாக டாப் 10 லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. இந்த சீரியல் துவங்கப்பட்டு ஒரு சில வாரங்கள் மட்டுமே ஆனாலும் டிஆர்பி-யில்10-வது இடத்தைப் பிடித்துள்ளது.

Also Read: குழந்தை பெற்ற பின்பும் குறையாத ரொமான்ஸ்.. கடற்கரையில் ஆல்யாவுக்கு லிப் கிஸ் கொடுத்த சஞ்ஜீவ் போட்டோஸ்

அதன் தொடர்ச்சியாக இந்த காலத்திலும் கூட்டு குடும்பம் சாத்தியம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு 9-வது இடமும், தொடர்ச்சியாக சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலுக்கு 8-வது இடமும், மிஸ்டர் மனைவி சீரியலுக்கு 7-வது இடமும் கிடைத்திருக்கிறது.

மேலும் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை தூக்கி நிறுத்தும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் இரண்டு மனைவிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகி உள்ள கோபியின் நிலை பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது. எனவே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 6-வது இடத்தில் உள்ளது.

Also Read: அஜித்திடம் இப்ப வரை இருக்கும் ஒரே கெட்ட பழக்கம்.. எவ்வளவு முயற்சித்தும் ஷாலினியால் மாற்ற முடியல

இதைத் தொடர்ந்து இனியா 5-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யம் குறையாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் சீரியலாகவே மாறிவிட்டது. இந்த சீரியலை பார்க்க வேண்டும் என்பதற்காகவே சரியான நேரத்திற்கு தொலைக்காட்சி முன்பு அமர்ந்து சிறியவர் முதல் பெரியவர் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் எதிர்நீச்சல் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

அதேபோல் இரண்டு மனைவிகள் இருந்தால் கணவனின் நிலை என்ன என்பதை வெளிக்காட்டும் சுந்தரி சீரியல் 3-வது இடத்திலும், அண்ணன் தங்கையின் பாசப் போராட்டத்தை அழகாக காண்பித்துக் கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியலுக்கு 2-வது இடமும், தோழியே மனைவியானால் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் கயல் சீரியல் வழக்கம் போல் முதலிடத்தை பிடித்துள்ளது.

Also Read: ரவிக்கை இல்ல, முதல் மரியாதை ராதா போல் போட்டோ ஷூட் நடத்திய சுந்தரி.. நெட்டிசன்களை விளாசிய சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்