பிக்பாஸ் எலிமினேஷன்.. இந்த வாரம் காணாமல் போகும் 3வது போட்டியாளர் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார்.

அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஒன்பது பேரில் மக்கள் அளித்த வாக்கியம் அடிப்படையில் குறைவான வாக்குகளைப் பெற்ற கிராமிய பாடகி சின்னப்பொண்ணு அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

ஏனென்றால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியமாக விளையாடத் தவறியதால் ரசிகர்களின் மனதை கவரவில்லை. அத்துடன் சின்ன பொண்ணு அவர்கள் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களை விட வயதில் அதிகமாக இருப்பதால் இளம் வயதினருடன் கலந்து விளையாட கொஞ்சம் தயக்கம் காட்டுகிறார்.

அத்துடன் அவர் பிக் பாஸ் வீட்டில் அவ்வப்போது கிராமியப் பாடல்களை மட்டுமே பாடிக் கொண்டிருக்கிறார். அதைத் தவிர பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் போட்டிகளில் சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் போட்டியிடுவதில்லை.

இதேபோன்றுதான் கடந்த சீசனிலும் நடிகை ரேகா, பாத்திமா உள்ளிட்ட வயது அதிகமாக இருக்கும் போட்டியாளர்கள் சீக்கிரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விடுவது வழக்கமாக உள்ளது.

bigg-boss-eviction-1
bigg-boss-eviction-1

அதைப் போன்றுதான் இந்த சீசனிலும் நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது வாரத்திலேயே சின்னப்பொண்ணு அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்