பொங்கலுக்கு வச்சு செய்யப்போகும் கண்ணம்மா.. உங்க அக்க போரு தாங்கல என கதறும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக எதிர்பார்ப்புடனும், விறு விறுப்புடனும் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. அதில் பிரசவத்தின் காரணமாக நடிப்புக்கு பிரேக் எடுத்திருந்த பரினா மீண்டும் தற்போது சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளது பலரின் வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த வாரம் அனைத்து சீரியல்களிலும் பொங்கல் நிகழ்ச்சி களை கட்டி வருகிறது. அதேபோன்று பாரதி கண்ணம்மா சீரியலிலும் பாரதியின் குடும்பத்தினர் அனைவரும் பொங்கல் வைப்பதற்காக நீதி காத்த அம்மன் கோவிலுக்கு செல்கின்றனர்.

அப்போது பாரதி, கண்ணம்மா தனியாக பொங்கல் வைக்க வேண்டும், நான் தனியாக வைக்கிறேன் என்று சொல்கிறார். இதைப் பார்த்து அங்கு வரும் ஒரு பெண்மணி, கண்ணம்மாவிடம் உங்கள் குடும்பத்தில் எதுவும் பிரச்சனையா என்று கேட்கிறார்.

அதைக்கேட்டு புரியாமல் நிற்கும் கண்ணம்மாவை பார்த்து அவர் எந்த இருவருக்கு பிரச்சனை இருக்கிறதோ அவர்கள் இருவரும் தனித்தனியாக பொங்கல் வைக்க வேண்டும். அதில் யாருடைய பொங்கல் முதலில் பொங்குகிறதோ அவர்கள் பக்கம்தான் நீதி இருக்கு என்று அர்த்தம் இதுதான் இந்த கோவிலின் சிறப்பு என்று சொல்கிறார்.

இதனால் குதூகலமான கண்ணம்மா பொங்கல் வைக்க தயாராகிறார். அனைவரும் எதிர்பார்த்தது போலவே கண்ணம்மாவின் பொங்கல் முதலில் பொங்குகிறது. உடனே அங்கிருக்கும் பூசாரி, பாரதியைப் பார்த்து நீதி காத்த அம்மன் நீதி கொடுத்திட்டா அம்மனின் நீதிக்கு தலைவணங்கு என்று சொல்கிறார்.

இதனால் அதிர்ச்சி ஆகும் பாரதி செய்வதறியாது நிற்கிறார். இந்த வாரம் முழுவதும் இதுபோன்ற காட்சிகள் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இனிமே டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தேவையில்லை, அம்மனே நீதி வழங்கிடுச்சி என்று இந்த சீரியலை கலாய்த்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்