வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பொழப்புக்காக அப்படி நடிச்சேன், 44 வயதிலும் ஏங்கி தவிக்கும் நடிகை.! வடிவேலால் சோலி முடிந்த வாழ்க்கை

Tamil Actress: அஜித்தின் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அந்த நடிகை, அதன் பிறகு வடிவேலு உள்ளிட்ட பல்வேறு நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்து காமெடியில் அசத்தினார்.

அதுவும் வடிவேலுவுக்கு மனைவியாக ரஜினியின் குசேலன் படத்தில் கிளாமர் தூக்கலாக நடித்து தன்னுடைய சினிமா கேரியரின் சோலிய முடித்து விட்டார். தெரிஞ்சோ தெரியாமலோ என்னுடைய பொழப்புக்காக கிளாமராக நடிச்சேன், ஆனா அதுவே என்னுடைய திருமண வாழ்க்கைக்கு உலை வைக்கும் என தெரியாம போச்சு.

தற்போது 44 வயதாகும் நடிகை சோனா நிறைய படங்களில் கவர்ச்சி தூக்கலாக நடித்து இளசுகளை திணறடித்தவர். இவர் கவர்ச்சியாக நடித்ததாலே தான் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார் என்பதை சமீபத்திய பேட்டியில் போட்டுடைத்தார். நான் திருமணமே வேண்டாம் என்று அடம் பிடிக்கவில்லை.

என்னை யாரும் திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை என்பதுதான் உண்மை. என்னோட பீலிங்க்ஸ யாரிடமாவது சொன்னா நல்ல நடிக்கிறியே என்று கிண்டலடிக்கின்றனர். என்னைப் பற்றி தவறாகவே புரிந்து கொள்கிறார்கள். படங்களில் மட்டுமே நான் கவர்ச்சி நடிகை நிஜ வாழ்க்கையில் சமைப்பேன்.

வீட்டு வேலை செய்வேன், ஒரு குடும்ப பெண்ணாகவே வாழ்கிறேன். ஆனால் என்னை யாரும் நம்ப மாட்றாங்க. இதற்காக ஒவ்வொருவரிடமும் சென்று என்னால் விளக்கம் கொடுக்க முடியல. படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து என்னோட பெயரை நானே கெடுத்து விட்டேன்.

அத நினைக்கிறப்ப தான் மனசு வலிக்குது. இதனால் பல வருடம் வீட்டை விட்டு வெளி வராமல் முடங்கி இருந்தேன் என்று தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்த ஏக்கத்தை 44 வயதில் நடிகை சோனா வெளிப்படையாக சொன்னார்.

- Advertisement -

Trending News