பாரதிகண்ணம்மா சீரியலிருந்து ரோஷினி விலக இதுதான் காரணமா? இயக்குனர் பக்கா பிளான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முதன்மை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது பாரதி கண்ணம்மா தொடர். பாரதிகண்ணம்மா சீரியல் விருவிருப்பான கதைக்களத்தை கொண்டு மக்களின் மனங்களை கவர்ந்ததோடு விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

பிரவீன் பெண்ணெட் இயக்கத்தில் அற்புதமாக உருவாகியிருக்கும் இந்த தொடரில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்ததோடு பல பட வாய்ப்புகளும் தேடி வந்துள்ளது. உதாரணமாக இந்த சீரியலில் அகிலாக நடித்த அகிலன் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஒளிர தயாராகி வருகிறார்.

அதைத்தொடர்ந்து சீரியலின் முக்கிய கதாபாத்திரமாக இருந்து வரும் வில்லி வெண்பா வாக நடிக்கும் பரினா அவர்களும் பிரசவத்திற்காக இந்தத் தொடரை விட்டு விலகுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதுவே படக்குழுவினருக்கும் மக்களுக்கும் அதிர்ச்சித் தகவலாக உள்ள நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி தரும் விஷயமாக இந்தத் தொடரின் கதாநாயகி கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியன் அவர்களும் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி அவர்கள் அந்த தொடரை விட்டு விலக அகிலன் போல படவாய்ப்பே காரணம் என்று பலராலும் பேசப்பட்ட நிலையில், கதைக்களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே அவர் விலக முக்கிய காரணம் என்று தற்போது செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது.

serial-bk-roshini-2
serial-bk-roshini-2

ஆனால் இதுகுறித்து நடிகை ரோஷினி அவர்கள் எந்த பதிலும் அவர் தரப்பிலிருந்து கூறாத நிலையில், இவர் இந்தத் தொடரில் தொடர்ந்து நடிப்பாரா? இல்லையா ?என்று தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

மக்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகியாகவும் பாரதிகண்ணம்மா சீரியலின் கலக்கல் கதாநாயகியாகவும் வலம் வந்த நடிகை ரோஷினி சீரியலை விட்டு விலகினால் மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கையும் குறைக்க வாய்ப்புள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்