பிக்பாஸ் டைட்டிலை தட்டிப் பறித்த போட்டியாளர்.. அனல் பறக்க வெளிவந்த அப்டேட்

விஜய் டிவியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் அமீர், பவானி ரெட்டி, ராஜு, பிரியங்கா, நிரூப் ஆகியோர் பைனலுக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் என்பதால் ரசிகர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்பதற்காக மும்முரமாக ஓட்டுகளை போட்டு வருகின்றனர்.

இதில் ஏராளமான ரசிகர்களை கொண்ட ராஜூ பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத டிவிஸ்ட் போன்று தற்போது பிக்பாஸ் பைனலில் நடந்துள்ளது. அதாவது விஜய் டிவியின் தொகுப்பாளினியாக வலம் வந்த பிரியங்கா இந்த பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் பிரியங்கா. அவர் இந்த சீசன் முழுவதும் தன்னுடைய குறும்புத்தனமான பேச்சாலும், நடவடிக்கைகளாலும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தார்.

இதனால் ஒவ்வொரு வாரமும் அவர் நாமினேட் செய்யப்படும் போது ரசிகர்களால் தொடர்ந்து காப்பாற்ற பட்டு வந்தார். இதற்கிடையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த தாமரைக்கும், பிரியங்காவுக்கும் கடுமையான வாக்குவாதங்களும், சண்டையும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அது கைகலப்பு வரை சென்று பஞ்சாயத்தில் முடிந்தது.

இதனால் ஒரு சிலர் பிரியங்காவுக்கு ஆதரவாகவும், எதிர்மறையாகவும் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் கடந்த சில வாரங்களாக பிரியங்கா தன்னுடைய குழந்தை தனமான குணத்தால் இந்த எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தையும் மாற்றி விட்டார் என்றே சொல்ல வேண்டும் .

கடந்த வாரம் பிக்பாஸ்நிகழ்ச்சியில்பிரியங்கா மக்களிடம் உங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்து எனக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது. இதனால் அவர் ரசிகர்களின் குயினாக சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனார். மேலும் அனைத்து தரப்பில் இருந்தும் அவருக்கு ஆதரவுகள் குவிந்தது.

100 நாட்களுக்கும் மேல் பிக் பாஸ் வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைகளையும், சச்சரவுகளையும் மகிழ்ச்சியுடன் கடந்து இன்று அவர் இந்த டைட்டிலை வென்றுள்ளார். அந்த வகையில் அவருக்கு இந்த வெற்றி மிகவும் பொருத்தமானது தான். பிரியங்கா பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்ற இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்