இதை தான் எதிர்பார்த்தோம் மனசை குளிர வைத்த கதிர்.. குணசேகரன் மூஞ்சியில் கரியை பூசிய ஆசை தம்பி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தற்போது வெளிவந்த ப்ரோமோவை பார்ப்பதற்கு ஆனந்தமாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. அத்துடன் இதை தான் பல மாதங்களாக நாங்கள் எதிர்பார்த்தோம் என்று பார்ப்பவர்களின் மனசை குளிர வைக்கும் அளவிற்கு கதிரின் பேச்சும் நடவடிக்கையும் இருக்கிறது.

அதாவது வழக்கம்போல எலக்சன் பிரச்சனையே பற்றி வட்டமேசை மாநாடு போட்டு நடுவீட்டில் அனைவரும் பேசுகிறார்கள். இதில் குணசேகரன் குதர்க்கமாகவும் அந்த வீட்டில் இருக்கும் பெண்களை மட்டம் தட்டியும் பேச ஆரம்பிக்கிறார். அப்பொழுது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நந்தினி, குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்கிறார்.

அதற்கு குணசேகரன், நந்தினியை பார்த்து ஏய் வாயை மூடுடி என்று ஆணவத்தில் அதட்டுகிறார். உடனே கதிர் கொடுத்தான் பாரு ஒரு சவுண்டு அண்ணே என்று சொல்லியதும் அனைவரும் வாயடைத்து போய் நின்று விட்டார்கள். அதோடு விடாமல் இனி, நந்தினியை  வாடி போடி என்றெல்லாம் சொல்லாதீர்கள் என்று சொல்லி குணசேகரன் மூஞ்சியில் கரியை பூசி விட்டார்.

Also read: வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் குணசேகரன் தங்கச்சி.. ஆடுபுலி ஆட்டம் ஆடும் அப்பத்தா

இதை பார்க்கும் பொழுது அட்ராசக்க, அடி தூள் என்று சொல்வதற்கு ஏற்ப ரிப்பீட் மோடில் இந்த பிரமோபை கிட்டத்தட்ட பத்து தடவை பார்த்து ரசிக்கிறோம் என ஒவ்வொருவரும் அவர்களுடைய ஆனந்தத்தை கமெண்ட்ஸில் தெறிக்க விடுகிறார்கள். இதனைக் கேட்டு அங்கே இருப்பவர்கள் அனைவரும் ஆடிப் போயி குணசேகரன் மூஞ்சியில் ஈ ஆடல.

என்னடா இது குணசேகரனுக்கு வந்த சோதனை என்பதற்கேற்ப கதிரின் பேச்சும் நடவடிக்கையும் ஆனந்தமாக இருக்கிறது. அத்துடன் நந்தினியும் இது என்ன கனவா இல்லையா நம்ம புருஷன் தானே என்று சிந்திக்கும் அளவிற்கு அவருடைய முகத்தில் ரியாக்ஷனை கொடுக்கிறார். இது போதாது குணசேகரனுக்கு இனி விழுகிற ஒவ்வொரு அடியும் மரண அடியாகத்தான் இருக்கப் போகிறது. இப்படியே கதை நகர்ந்தால் கண்டிப்பாக டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்து விடும்.

Also read: புஸ்வானம் மாதிரி புஸ்ன்னு போன சைக்கோ பிரச்சனை.. கோபியை காப்பாற்றும் பாக்யா