ஹாலிவுட் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணும் மணிரத்தினம்.. கமலின் தக் லைஃப் படத்தின் கதை இதுதான்

Kamal In Thug Life: கமல் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படம் வெளிவரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து கொண்டு வருவதால் இப்போதைக்கு இந்தியன் 2 படம் வெளிவருவதாக இல்லை. இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் அவருடைய 234 வது படத்தில் கூட்டணி வைத்து இருக்கிறார்.

இப்படத்திற்கான டைட்டிலை கமலின் பிறந்தநாள் அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிட்டார்கள். டைட்டிலே ரொம்பவே வித்தியாசமாகவும் ஆங்கில வார்த்தைகளை வைத்து தக் லைஃப் என்று வைத்திருக்கிறார்கள். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா ஆகியோர் இணைந்து இருக்கிறார்கள். அத்துடன் வழக்கம்போல் மணிரத்தினம் என்றாலே ஏஆர் ரகுமான் இல்லாமல் இருக்காது.

அந்த வகையில் இப்படத்திற்கும் ஏஆர் ரகுமான் இசையமைக்க போகிறார். மேலும் கமலின் பிறந்தநாள் அன்று அறிமுக வீடியோவை வெளியிட்டார்கள். அதை பார்க்கும் பொழுது ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பது போல் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இப்படம் எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் தேடிப் பார்க்கும் பொழுது தான் இது ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தி ரைஸ் ஆப் ஸ்கைவாக்கர் என்ற ஹாலிவுட் படத்தின் கதையாக இருக்கிறது.

Also read: படத்துக்காகவே கமல் கத்துக்கிட்ட 5 விஷயங்கள்.. சொல்லிக் கொடுத்த நடிகையவே ஹீரோயின் ஆக்கிய உலகநாயகன்

அத்துடன் தி தக்கி(The Thuggee) என்ற புத்தகத்தின் தழுவலாக இருக்கிறதாம். மேலும் இப்படத்தின் கதை 15 முதல் 20 வரை உள்ள நூற்றாண்டு காலத்தில் நடந்த கேங்ஸ்டர் ஒருவரின் கதை என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தக் லைஃப் படம் முழுக்க முழுக்க ஏற்கனவே வெளிவந்த படத்தின் காபி கதையாக தான் இருக்கப் போகிறது.

மேலும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயின் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கிறது. அந்த வகையில் இப்படம் அதிக அளவில் பட்ஜெட்டுடன் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப் போகிறார்கள்.

இதற்கிடையில் அறிமுக வீடியோவில் கமல் அவருடைய பெயரை ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்றும் காயல்பட்டிக்காரன் என கூறுவதை பார்க்கும் பொழுது நாயகன் படத்தை நமக்கு ஞாபகம் படுத்துவது போல் இருக்கிறது. ஏனென்றால் நாயகன் படத்தில் இவருடைய பெயர் சக்திவேல் தான். அந்த வகையில் அதுல விட்ட குறை தொட்ட குறையாகவும் இதில் சில காட்சிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: சிம்பு இடத்தை அசால்டாக தட்டி தூக்கிய வாரிசு நடிகர்.. மணிரத்தினம்-கமல் கூட்டணியில் என்ன ரோல் தெரியுமா?

Next Story

- Advertisement -