மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்.. பதறிப்போன தொண்டர்கள், தேமுதிக வெளியிட்ட அறிக்கை

Vijayakanth Back To Hospital: கேப்டன் விஜயகாந்த் பல வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனாலேயே பொதுவெளிக்கு அவர் வருவது அரிதிலும் அரிதாகி விட்டது. ஆனாலும் அவருடைய தரிசனம் அவ்வப்போது தொண்டர்களுக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த சூழலில் அவர் கடந்த மாதம் வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகளின் காரணமாக இரண்டு வாரங்களுக்கும் மேலாக அவர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்றார்.

இது கடும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் செய்திகள் பரவியது. அதை அடுத்து மருத்துவமனையில் விஜயகாந்த் இருக்கும் போட்டோவை வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் அவருடைய குடும்பத்தினர்.

Also read: சசிகலாவை மிஞ்சிய பிரேமலதா, உங்க ஆட்டத்திற்கு கேப்டனை ஏன் கஷ்டப்படுத்துறீங்க! வலுக்கும் கண்டனங்கள்

அதன் பிறகு பூரண குணமடைந்து வீடு திரும்பிய அவர் தேமுதிக கட்சி கூட்டத்திலும் கலந்து கொண்டார். அதில் கேப்டனின் மனைவி பிரேமலதாவுக்கு பொதுச்செயலாளராக பதவி பிரமாணம் செய்யப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

இந்நிலையில் மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இது வழக்கமான பரிசோதனை தான் என கட்சி சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் அவர்கள் கேப்டன் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தேமுதிக வெளியிட்ட அறிக்கை

dmdk-vijayakanth
dmdk-vijayakanth

அவர் பூரண நலத்துடன் தான் இருக்கிறார். பரிசோதனை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளனர். அதை பார்த்த கட்சி தொண்டர்கள் இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இருப்பினும் கேப்டன் நலமுடன் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

Also read: ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.. பிரேமலதாவை ஆட்டி படைக்கும் புகழ் போதை, லைஃப்பில் சறுக்கிய கேப்டன்

Next Story

- Advertisement -