சைக்கோ இயக்குனரை லாக் செய்த லோகேஷ்.. மாறி மாறி புகழ்ந்து தள்ள இதான் காரணம்

லோகேஷ் கனகராஜ் இப்போது லியோ திரைப்படத்தில் படு பிசியாக இருக்கிறார். விஜய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் அந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதால் மே மாதத்திற்குள் ஷூட்டிங்கை முடிக்க படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய பகுதிகளை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார். அது குறித்து சமீபத்தில் தன் சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருக்கும் மிஷ்கின், லோகேஷ் கனகராஜை ஓவராக புகழ்ந்து தள்ளி இருந்தார். அது மட்டுமல்லாமல் இந்த குளிரிலும் கடுமையாக உழைக்கும் டெக்னீசியன்களையும் பாராட்டி இருந்தார்.

Also read: சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் ஹீரோ.. பாலிவுட்டில் நடிகராக முத்திரை பதித்து வரும் விஜய் தம்பி

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் லோகேஷ் தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். படப்பிடிப்பு தளத்தில் உங்களின் திறமையை பார்த்து நாங்கள் வியப்படைந்தோம். உங்களுக்கு ஒரு வார்த்தையில் நன்றி என்று சொன்னால் போதாது, மில்லியன் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.

இப்படி மிஷ்கின் மற்றும் லோகேஷ் இருவரும் மாறி மாறி புகழ்ந்து தள்ளி இருப்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. ஏனென்றால் மிஷ்கின் காரணம் இல்லாமல் ஒருவரை இந்த அளவுக்கு புகழ்ந்து பேச மாட்டார். அந்த வகையில் அவர் லோகேஷ் கனகராஜின் திறமையை குறித்து போர் வீரன் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.

Also read: அடுத்த மாநாடுக்கு ரசிகர்களை திரட்டும் சிம்பு.. விஜய்யின் மேடையை விட பிரம்மாண்ட ஏற்பாடு

இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் லோகேஷ் பதிலுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டிருப்பதற்குப் பின் சில காரணங்களும் இருக்கிறது. அதாவது தற்போது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளில் பிசியாகும் லோகேஷ் அடுத்ததாக மிஷ்கினை வைத்து ஒரு படத்தை உருவாக்க இருக்கிறாராம். அதற்காகத்தான் இப்படி மீடியாவில் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வரும் மிஷ்கின் லியோ படத்தை தொடர்ந்து நடிப்பில் அதிக கவனம் செலுத்த இருக்கிறாராம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது இவர் லோகேஷை சிறந்த இயக்குனர் என்று கூறுவதை பார்க்கும் போது இவர்களின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியானது என்று புரிகிறது.

Also read: விஜய்க்காக சொம்படிக்கும் மிஷ்கின்.. உங்க முதுகு அழுக்கை துடைச்சிட்டு அடுத்தவனுக்கு பாலிஷ் போடுங்க!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்