Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்காக சொம்படிக்கும் மிஷ்கின்.. உங்க முதுகு அழுக்கை துடைச்சிட்டு அடுத்தவனுக்கு பாலிஷ் போடுங்க!

விஜய் மீது உள்ள பாசத்தால் ஓவராக அவருக்கு சப்போர்ட் செய்யும் மிஷ்கின்.

விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். சமீபத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்த அவர் அது குறித்து தன் சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் புகழ்ந்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது மைனஸ் டிகிரி கடும் குளிரிலும் போர் வீரன் போல் செயல்பட்ட லோகேஷ் கனகராஜ் சிறந்த இயக்குனர் என்றும் விஜய் உடன் இணைந்து நடித்தது எனக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் சிரமமான சூழ்நிலையிலும் படக்குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கடுமையாக உழைத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் புகழ்ந்து பேசி இருந்தார்.

Also read: விஜய்க்கு சிம்பு கொடுத்த மாஸ் என்ட்ரி.. அதே சந்தோஷத்தை வாரிசு நடிகருக்கு திருப்பிக் கொடுத்த எஸ்டிஆர்

அதனால் தான் குளிரையும் பொருட்படுத்தாமல் என்னுடைய காட்சிகளை நான் முடித்துக் கொடுத்து விட்டேன் என்று பதிவிட்டு இருந்தார். தற்போது அவர் கூறிய இந்த விஷயம் தான் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. ஏனென்றால் இதேபோன்று துப்பறிவாளன் 2 படத்தை அவர் இயக்கிய போது படப்பிடிப்பு முழுவதையும் லண்டனில் வைத்துக் கொள்ளலாம் என விஷாலிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் அப்போது அங்கு கடும் குளிர் நிலவியதால் விஷால் அங்கு சூட்டிங் செய்தால் லைட்டிங் மற்றும் கேமரா பிரச்சனைகள் வரும். படப்பிடிப்பு நேரமும் குறைவாக இருக்கும். அதனால் வேறு எங்கேயாவது ஷூட்டிங் நடத்தலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் மிஷ்கின் அங்கு தான் படத்தை எடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். அதனால் வேறு வழியின்றி விஷாலும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.

அதன் பிறகு பட குழுவினர் அனைவரும் லண்டன் புறப்பட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் மிஷ்கின் அந்த கடும் குளிரில் படப்பிடிப்பு நடத்தாமல் தூங்கியே பொழுதை கழித்து இருக்கிறார். மேலும் பதினைந்து நாட்கள் வரை ஊர் சுற்றுவது என அனைவரின் நேரத்தையும் விரயம் செய்திருக்கிறார். இதனால் விஷாலுக்கு 40 லட்சம் வரை நஷ்டமாகி இருக்கிறது.

Also read: விஜய்யை போல் ஒதுக்கி வைத்த சூர்யா.. பொண்டாட்டி பேச்சால் பிரிந்த குடும்பம்

இதுதான் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த மனஸ்தாபத்திற்கு மூல காரணம். அதுதான் இப்போது வரை பெரும் பிரச்சனையாக தொடர்ந்து வருகிறது. இப்படி மிஷ்கின் கடும் குளிரை காரணம் காட்டி விஷாலுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினார். ஆனால் அதற்கு தலைகீழாக லியோ படத்தில் மைனஸ் டிகிரி குளிரிலும் நடித்து கொடுத்திருக்கிறார். அங்கு என்னால் நடிக்க முடியாது என்று அவர் ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அவருக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் அப்படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார். இப்படி ஆள் பார்த்து நாடகம் போடும் மிஷ்கினை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் உங்கள் முதுகில் இருக்கும் அழுக்கை கிடைத்துவிட்டு அடுத்தவருக்கு பாலிஸ் போடுங்கள் எனவும் ரசிகர்கள் காட்டத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

Also read: தோல்விக்கு அஞ்சாமல் மீண்டும் தலையை விடும் விஜய்.. தளபதி 68 இயக்குனரை லாக் செய்த சம்பவம்

Continue Reading
To Top