ரெமோ மேடையில் சிவகார்த்திகேயன் கதறிய காரணம் இதுதான்.. இப்படியும் ஒரு தயாரிப்பாளரா?

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் இப்போது சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து தான் இந்த இடத்தை தக்க வைத்திருக்கிறார். அந்த வகையில் ரெமோ படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் கதறி அழுதிருப்பார்.

அதாவது 6 மாதமாக தன்னால் எந்த படமும் பண்ண முடியவில்லை. இதனால் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்ததாகவும் அதற்குள் இரண்டு படங்கள் முடித்திருக்கலாம் என்று தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். இப்போது சிவகார்த்திகேயன் அந்த பிரச்சனையை சந்திக்க காரணம் ஞானவேல் ராஜா தான் என்று ஒரு செய்தி பரவி வருகிறது.

அதாவது 2015 ஆம் ஆண்டு ரஜினி முருகன் படப்பிடிப்பு முடிந்த போது சிவகார்த்திகேயன் ஞானவேல் ராஜாவிடம் ஒரு படம் பண்ணுவதற்காக அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார். மேலும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இழுத்தடிக்கப்பட்டதாகவும், வேறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க முடியாமலும் டார்ச்சர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read : எஸ்கேப் ஆன சிவகார்த்திகேயன், மன்சூர் அலிகான்.. ப்ளூ சட்டை வாயில் விழுந்து சின்னாபின்னமாகும் இயக்குனர்

அதன்பிறகு ஒரு வழியாக ஆர் டி ராஜா சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ படத்தை தயாரித்திருந்தார். அந்த வெற்றி விழாவில் தான் சிவகார்த்திகேயன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அடுத்ததாக இதே கூட்டணியில் வேலைக்காரன், சீமராஜா போன்ற படங்கள் வெளியாகி இருந்தது.

அதன்பிறகு தான் ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் பணி புரிந்தார். அப்போதும் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக சிவகார்த்திகேயன் ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார். கடைசியாக அந்த படமும் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறாமல் போய்விட்டது.

Also Read : அதிக கடன் சுமையால் வெளிவராமல் தத்தளிக்கும் 4 படங்கள்.. மரண அடி வாங்கும் சிவகார்த்திகேயன்