எஸ்கேப் ஆன சிவகார்த்திகேயன், மன்சூர் அலிகான்.. ப்ளூ சட்டை வாயில் விழுந்து சின்னாபின்னமாகும் இயக்குனர்

Blue Sattai Maaran-Sivakarthikeyan: சில வாரங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் இமான் விவகாரம் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு எதிராக பல விமர்சனங்கள் குவிந்தது. அதிலும் ப்ளூ சட்டை மாறன் அவரை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு வச்சு செய்தார்.

அதற்கு அடுத்தபடியாக த்ரிஷாவை ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கினார் மன்சூர் அலிகான். அந்த பிரச்சனை தான் இப்போது சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவரால் டாப் ஹீரோக்களின் பழைய பஞ்சாயத்துகள் கூட இப்போது வரிசை கட்ட ஆரம்பித்திருக்கிறது.

அதேபோன்று பிக்பாஸ் வீட்டில் இருக்கும் விசித்திரா 20 வருடங்களுக்கு முன்பு தனக்கு நடந்த அநியாயத்தை வெளிப்படையாக கூறினார். அதற்கு காரணமான தெலுங்கு நடிகர் பாலைய்யாவும் இப்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மீடியாக்களிலும் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறார்.

Also read: சல்மான் கானின் டைகர் 3 எப்படி இருக்கு.? ப்ளூ சட்டையின் விமர்சனம்

இந்த சூழலில் இயக்குனர் சீனு ராமசாமி இளம் நடிகைக்கு கொடுத்த டார்ச்சரை பற்றி சினிமா விமர்சகர் பிஸ்மி வெளிப்படையாக கூறியிருந்தார். அதுவும் இப்போது காட்டு தீயாக பரவி வருகிறது. அதைத்தான் இப்போது ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நக்கலாக பதிவிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் அவர் சீனு ராமசாமியின் போட்டோவை போட்டு பெண்களை தெய்வமாக மதிப்பதில்லை தர்மதுரை. தன் படங்களில் நடிக்கும் நடிகைகளை பத்திரமாக பார்ப்பதில் மாமனிதன். இடம் பொருள் ஏவல் பார்க்காமல் யாராவது பெண்களிடம் தவறாக நடந்தால் தட்டிக் கேட்கும் இடிமுழக்கம் என கிண்டல் அடித்திருக்கிறார்.

Also read: நீங்க ஆம்பளையா, உங்களுக்கு எதுக்கு மீசை?. டாப் நடிகர்களை காரி துப்பும் ப்ளூ சட்டை

அந்த வகையில் இவரிடம் இருந்து மன்சூர் அலிகான், சிவகார்த்திகேயன் இருவரும் எஸ்கேப் ஆகிவிட்டனர். ஆனால் சீனு ராமசாமி வசமாக சிக்கிவிட்டார். இன்னும் இவருடைய ரகசியங்கள் என்னென்ன வெளியில் வருமோ தெரியவில்லை. ஆனால் இதெல்லாம் ப்ளூ சட்டை மாறனுக்கு சாதகமாகவே இருக்கிறது.

blue-sattai-maaran-tweet
blue-sattai-maaran-tweet