80 கோடி பட்ஜெட் எகிறியதற்கு இதான் காரணமா.? மொத்தமாக சொதப்பிய படக்குழு

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட சமந்தாவின் மார்க்கெட் டாப் கீரில் எகிறியது. அதன் பின்பு நடித்த யசோதா கணிசமான வரவேற்பு கிடைத்தது. அதை அடுத்து வெற்றியில் திளைத்த சமந்தா, இயக்குனர் குணசேகரன் இயக்கத்தில் உருவான சாகுந்தலம் படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பான் இந்தியா படமாக வெளியான சாகுந்தலம் படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் குவிந்தது. மேலும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஏதோ ஒரு கார்ட்டூன் படத்தை பார்ப்பது போன்று இருப்பதாகவும் விமர்சித்தனர்.

Also Read: அந்த இடத்துல முடி இருந்தா இப்படித்தான்.. தயாரிப்பாளரை பப்ளிக்காக அசிங்கப்படுத்திய சமந்தா

மேலும் இந்தப் படத்தின் பட்ஜெட் 80 கோடி எகிறியதற்கு என்ன காரணம் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இத்தனை கோடிகளை கொட்டி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட சாகுந்தலம், எதிர்பார்த்ததை விட பாதி அளவு கூட லாபம் கொடுக்கவில்லை. சுமார் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளது.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் திரையரங்கு விநியோகஸ்தர்களும் சாகுந்தலம் படத்தினால் படு தோல்வியை சந்தித்து தலையில் துண்டை போட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல தற்போது சமந்தாவும் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்.

Also Read: அச்சு அசல் சாகுந்தலையாக மாறிய தர்ஷா குப்தா.. சமந்தாவிற்கே டஃப் கொடுக்கும் புகைப்படங்கள்

இவ்வளவு மொக்கையான படத்திற்கு எதற்காக தயாரிப்பாளர் பல கோடிகளை கதாநாயகன் தேவ் மோகனுக்கு கொட்டிக் கொடுத்திருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த படத்தில் துஷ்யந்தனாக நடித்துள்ள மலையாள நடிகர் தேவ் மோகனுக்கு ரூபாய் 1.75 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதைக் கேட்ட பலரும் வாயை பிளந்துள்ளனர். ஏனென்றால் இந்த படத்தின் நடிகர்களுக்கு இவ்வளவு சம்பளத்தை கொடுத்ததற்கு பதில் செலவு செய்து கிராபிக்ஸில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தில் தான் படக்குழு மொத்தத்தையும் சொதப்பி உள்ளது.

Also Read: பிரிந்த கணவரை மறக்க முடியாமல் தவிக்கும் சமந்தா.. லண்டனில் அம்பலமான உண்மை!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்