ரஜினியை சீண்டிய ரோஜா.. சந்திரபாபுவின் வெற்றியும் ஜெகன் மோகனின் வீழ்ச்சியும்

Rajini: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது. அதில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளார்.

இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. அதற்கு எதிர் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

Rajinikanth
Roja
Chandrababu naidu
Jagan Mohan Reddy

மொத்தம் 175 சட்டமன்ற தொகுதியில் இந்த கூட்டணி 167 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி இருக்கிறது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 135 இடங்களில் வெற்றி கண்டுள்ளது.

மேலும் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் ஜனசேனா கட்சி 21 பகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் வெறும் 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ளனர்.

ரஜினியை சீண்டிய ரோஜா

இதற்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த ஜெகன்மோகன் ரெட்டி தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளார். இதற்கு சந்திரபாபு நாயுடுவின் கைது தான் காரணமாக இருக்கிறது.

அதை ஆந்திர மக்கள் எதிர்பார்க்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. மேலும் சிறையில் இருந்து வந்த சந்திரபாபு தான் அனுபவித்த துயரங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இதுவும் அனுதாப ஓட்டுக்களை கொடுத்துள்ளது. அதேபோல் என்டிஆரின் நூற்றாண்டு விழாவில் ரஜினி கலந்து கொண்ட போது சந்திரபாபுவை பற்றி புகழ்ந்து பேசி இருந்தார்.

அதற்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அது மட்டுமின்றி ரஜினியை ஜீரோ என்றெல்லாம் விமர்சித்தார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது

ஜெகன் மோகன் ரெட்டி இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூட ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர். இவ்வாறாக ரஜினி ரசிகர்களின் ஆதரவும் சந்திரபாபுவின் வெற்றிக்கு ஒரு மறைமுக காரணமாக இருக்கிறது.

அதேபோல் ரஜினியை விமர்சித்த ரோஜாவும் தோல்வியை கண்டுள்ளார். இதைத்தான் ரசிகர்கள் இப்போது கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு விரைவில் பதவியேற்க இருக்கிறார்.

தேர்தல் முடிவுகளும் மக்களின் தீர்ப்பும்

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -