ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தேர்தல் முடிவுக்கு பின் செல்போனை தொட்டாலே காசு.. ‘G’ வைத்து கமுக்கமாக ஆப்பு வைக்கும் பெரும் முதலாளிகள்

Increase the mobile recharge: இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத மனிதர்களே இல்லை. அதிலும் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த ஒரு செல்போனுக்கு மட்டும்தான் அடிமையாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக நம்மளை மாற்றிவிட்டது.

அத்துடன் செல்போன் இருந்தால் உலகமே நம்ம கையில் இருக்கிறது என்று அனைவரும் அதை பயன்படுத்தி வருகிறோம். தற்போது இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக டெலிகாம் நிறுவனம் ஒரு முடிவு எடுத்து இருக்கிறது.

அதாவது சமீபத்தில் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின்னர் டெலிகாம் நிறுவனம் எடுத்திருக்கும் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போகிறார்கள்.

சொகுசாக பயன்படுத்தியதால் வைத்த ஆப்பு

அது என்னவென்றால் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு கட்டணத்தை உயர்த்தப் போகிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு டெலிகாம் நிறுவனங்கள் 20% வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது.

மறுபடியும் கட்டணத்தை உயர்த்தும் விதமாக மகாராஷ்டிராவை சேர்ந்த நிறுவனமான Antique stock Broking நிறுவனத்தின் ஆய்வுப்படி தேர்தலுக்குப் பிறகு தொலைதொடர்பு சேவை கட்டணம் 15 முதல் 17 சதவீதம் வரை உயர வாய்ப்பு இருக்கிறது என்று வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதனால் பாரதி ஏர்டெல் நிறுவனம் அதிகம் பயனடையலாம் என்றும் அடுத்து வரக்கூடிய 2027 நிதியாண்டில் இந்நிறுவனம் ஒரு பயனளிடமிருந்து பெரும் சராசரி வருவாயை ரூபாய் 208 முதல் 286 வரை உயரக்கூடும். அத்துடன் ஜியோ மற்றும் வோடபோன் போன்ற டெலிகாம் 4ஜி, 5ஜி சேவை வழங்கும் தொடர்பு கட்டணத்தை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

இதனால் 5G உள்கட்டமைப்புக்காக டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்திருப்பதாகவும் அதை ஈடு கட்டும் வகையில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறார்கள். இதுவரை சொகுசாக செல்போனை பயன்படுத்திய பயனாளிகளுக்கு இனி போனை தொட்டாலே காசு என்று பதற வைக்கும் அளவிற்கு ஜி நிறுவனங்கள் கமுக்கமாக ஆப்பு வைத்து விட்டார்கள்.

- Advertisement -

Trending News