Biggboss 8: பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாள் விரைவில் வர இருக்கிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் சீசன் 8 வரும் ஆறாம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது.
இதற்கான இறுதி கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இவர்கள்தான் போட்டியாளர்கள் என ஒரு லிஸ்ட் மீடியாவை சுற்றி வருகிறது. ஆனால் அதில் நாம் நம்ப முடியாத வாய்ப்பே இல்லாத சில பெயர்களும் அடிபடுவது தான் வேடிக்கையாக உள்ளது.
இப்படி பல யூகங்கள் சுற்றி வரும் நிலையில் தற்போது உறுதியான சில போட்டியாளர்களின் லிஸ்ட் கிடைத்துள்ளது. அதன்படி இந்த சீசனில் நாம் எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கலாம். அதற்கேற்றார் போல் தான் போட்டியாளர்களை விஜய் டிவி தேர்வு செய்துள்ளது.
அந்த வகையில் குக் வித் கோமாளி பிரபலங்கள் தான் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த தர்ஷா குப்தா, விஜே விஷால் ஆகியோர் இருக்கின்றனர்.
மேலும் விஜய் டிவியில் இருந்து தற்போது காணாமல் போன தொகுப்பாளினி ஜாக்குலின் பிக் பாஸ் வீட்டுக்கு வர இருக்கிறார். அவரை தொடர்ந்து சமீபத்தில் பயங்கர சர்ச்சையில் சிக்கிய பாடகி சுசித்ராவின் முன்னால் கணவரான கார்த்திக் குமார் பங்கேற்க உள்ளார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் காதல் ஜோடி
அடுத்ததாக மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனாவும் போட்டியாளராக களம் இறங்க உள்ளார். இவரைத் தொடர்ந்து காதல் ஜோடியான சோயா, டிடிஎஃப் வாசன் பங்கேற்கின்றனர். அடுத்ததாக குக் வித் கோமாளியில் லேடி டான் போல் இருந்த அன்ஷிதாவும் பங்கேற்க உள்ளார்.
இவர் இருந்தால் நிச்சயம் அவரும் வரணுமே என நீங்கள் கேட்கலாம். அதே தான் செல்லம்மா சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த அர்ணவ் பிக் பாஸ் வீட்டுக்குள் வர இருக்கிறார். நிச்சயம் இவர் ஹீரோயிசம் என்ற பெயரில் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்புவார் என்பதில் சந்தேகம் இல்லை.
இதை அடுத்து சுனிதாவிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். எப்படியும் உறுதியாகிவிடும் என்கின்றனர். மேலும் மாடல் சௌந்தர்யா, TSK உள்ளிட்டோரும் இந்த லிஸ்டில் இருக்கின்றனர்.
இதனால் இந்த சீசன் கலகலப்பு, சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.. அதே போல் விஜய் சேதுபதிக்கும் அதிக பஞ்சாயத்து இருக்கும் என தெரிகிறது. ஆக மொத்தம் விஜய் டிவி டிஆர்பியை பிடிக்க தீயாக வேலை பார்த்திருக்கிறது.
உறுதியான பிக் பாஸ் போட்டியாளர்களின் லிஸ்ட்
- கமல் இல்லாத பிக்பாஸ் 8 எப்படி இருக்கும்.?
- கமலுடன் விஜய் சேதுபதியை ஒப்பிட முடியாது
- விஜய் சேதுபதிக்கு எதிராக களமிறக்கப்படும் ஹீரோ