ரஜினி, விஜயகாந்துக்கு ரசிகர்களை உருவாக்கித் தந்த இயக்குனர்.. பெண்களை ஏங்க வைத்த சூப்பர் ஸ்டார்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கதைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த மாதிரி படங்களை எடுத்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்த பல இயக்குனர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப மக்களின் ரசனையும் வித்தியாசமாக மாறிக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் மக்களை திருப்திப்படுத்தினால் தான் ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகி நல்ல வசூலையும் பெற்று தரும். அப்படி மக்களின் ரசனைக்கு ஏற்ப பல திரைப்படங்களை இயக்கி ரஜினி, விஜயகாந்த் போன்ற நடிகர்களை மக்கள் மத்தியில் மிகவும் எளிதாக கொண்டு சென்றவர் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன்.

80 காலகட்ட தமிழ் சினிமாவில் இவர் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ராஜாதி ராஜா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். அதில் ரஜினி இரண்டு கேரக்டர்களில் நடித்திருப்பார்.

மேலும் அப்படத்தில் ரஜினி மிகவும் அழகாகவும், துள்ளலாகவும் இருப்பார். அதன் காரணமாகவே அந்த திரைப்படம் சக்கை போடு போட்டது. அதேபோன்று சுந்தர்ராஜன் கேப்டன் விஜயகாந்த்துக்கு நிறைய வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அதிலும் முக்கியமாக அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்கள் விஜயகாந்த்துக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

இப்படி ரஜினி மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கித் தந்த பெருமை சுந்தர்ராஜனுக்கு உண்டு. பெண்களை கவரும் குடும்ப பங்கான கதைகளை எடுப்பதில் இவர் வல்லவர். இதனாலேயே இவர் இயக்கும் படங்களுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர்.

அந்த அளவுக்கு புகழ் பெற்ற இயக்குனராக வலம் வந்த சுந்தர்ராஜன் இப்போது இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பின் பக்கம் சென்று விட்டார். இவர் 1999ல் சுயம்வரம் என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து 2013 ல் சித்திரையில் நிலா சோறு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாததால் இவர் மீண்டும் நடிப்பிற்கே சென்று விட்டார்.

Next Story

- Advertisement -