12 லட்சம், ஆசை காட்டும் பிக்பாஸ்.. தடுமாறும் ஹவுஸ் மேட்ஸ், பணப்பெட்டியை தூக்கியது இவர்தான்

Biggboss 7: பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டியை எடுக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

அதன்படி கடந்த சில நாட்களாக சோர்வடைந்திருக்கும் விசித்ரா இதை எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆடியன்ஸ் கூறி வருகின்றனர். ஆனால் மாயா இதை எடுக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இவருடைய கேம் ப்ளான் எதிர்பார்க்காததாக தான் இருக்கிறது.

Also read: பூர்ணிமாவுக்கும் எனக்கும் நடுவுல ஒன்னும் இல்ல.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த விஷ்ணு

அதனாலேயே இந்த பணப்பெட்டியை அவர் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் மூன்று நாட்களாக வீட்டுக்குள் பணப்பெட்டி இருக்கும் நிலையில் யாரும் அதை சீண்டவில்லை. அதைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் பண மதிப்பை 12 லட்சம் ஆக உயர்த்தி இருக்கிறார்.

இதனால் இப்போது வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்திருக்கிறார்கள். இத்தனை நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்பளத்தோடு 12 லட்சமும் இருந்தால் போதும் என்ற மனநிலைக்கும் ஒரு சிலர் வந்திருக்கின்றனர்.

Also read: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர்தான்.. தொட முடியாத உயரத்தில் அர்ச்சனா, ஓட்டிங் லிஸ்ட்

அதனால் இனிமேலும் தாமதிக்காமல் புத்திசாலித்தனமாக பணப்பெட்டியை எடுக்கும் முடிவிலும் அவர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ப்ரோமோ தான் தற்போது வெளியாகி உள்ளது. இது தற்போது சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மாயா தான் அதை எடுப்பார் என்ற கருத்துக்கள் தான் அதிகமாக இருக்கிறது.