சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தேசிய விருதுக்கு தகுதி இருந்தும் மறுக்கப்படும் நடிகர்.. இன்று வரை விலகாத மர்மம்

திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நட்சத்திரங்களுக்கு பல விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசிய விருது பல நடிகர்களின் கனவாக இருக்கிறது. அந்த விருது சிலருக்கு வெகு சீக்கிரத்திலேயே கிடைத்து விடுகிறது.

ஆனால் ஒரு சில நடிகர்களுக்கு அது எட்டாக்கனியாக இருக்கிறது. அந்த வகையில் தகுதி இருந்தும் இன்று வரை ஒரு நடிகருக்கு மட்டும் தேசிய விருது கிடைக்கவில்லை. அவர் வேறு யாரும் அல்ல தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவையின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த வடிவேலு தான்.

சினிமாவில் இதுவரை இவர் செய்யாத கதாபாத்திரங்களே கிடையாது. அதேபோன்று இவருடைய நகைச்சுவை பார்த்து சிரிக்காத மனிதர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் ஒரு முன்னணி காமெடி நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

எத்தனையோ புதுப்புது நடிகர்கள் காமெடியில் கலக்கி வந்தாலும் இன்று வரை இவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். மேலும் இவருடைய வசனங்கள் தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.

அந்த அளவுக்கு புகழுடன் இருக்கும் வடிவேலுக்கு இன்று வரை தேசிய விருது கிடைக்கவில்லை. அதற்கான காரணமும் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. இவர் காமெடியனாக மட்டுமல்லாமல் ஹீரோ, குணச்சித்திரம் போன்ற பல கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

அப்படி இருக்கும் போது இவரை ஒரு காமெடியனாக நினைத்துதான் இந்த விருது அவருக்கு மறுக்கப்பட்டதா என்ற ஒரு சந்தேகமும் எழுகிறது. தேசிய விருது என்ற ஒரு அங்கீகாரம் இவருக்கு கிடைக்கப்படவில்லை என்றாலும் கோடான கோடி மக்களின் அன்பு இவருக்கு எப்போதோ கிடைத்துவிட்டது. அதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரிய விருதுதான்.

- Advertisement -

Trending News