இந்த 6வது சீசனில் நிச்சயம் சம்பவம் இருக்கு.. இணையத்தில் லீக்கான பெண் போட்டியாளர்களின் லிஸ்ட்

கடந்த ஐந்து சீசன்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய என்டர்டைன்மென்ட் பிக் பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் 2ம் தேதி 17 முதல் 20 போட்டியாளர்களுடன் துவங்கப்படுகிறது. இதில் பொதுமக்களிடம் இருந்து 2 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். இவர்களைத் தவிர மீதமிருக்கும் பிரபலங்கள் லிஸ்டில் பெண் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த லிஸ்டை பார்த்தால் நிச்சயம் இந்த சீசனின் சம்பவமும் இருக்கிறது. அந்த அளவிற்கு போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளனர். இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா, விஜய் டிவியின் செந்தூர பூவே சீரியல் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா, நாட்டுப்புற பாடகியாக சூப்பர் சிங்கரில் பிரபலமாகி அதன்பிறகு புஷ்பா படத்தில் சாமி பாடல்கள் மூலம் சினிமாவில் பிரபலமான பாடகி ராஜலட்சுமி.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 கன்ஃபார்மான 9 ஆண் போட்டியாளர்கள்.. ஆண்டவரை சந்திக்க தயாராகும் போட்டியாளர்கள்

ஜீ தமிழ் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி, விஜய் டிவியில் சீரியலில் அறிமுகமாகி பின்னர் சில பிரச்சனைகளால் அந்த சேனலில் இருந்து விலகி ஜீ தமிழின் சத்யா சீரியல் புகழ் ஆயிஷா, விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி என்கிற டிடி.

இவர்களுடன் விஜய் டிவியின் டாப் சீரியல் ஆன பாரதிகண்ணம்மா சீரியலின் முன்னாள் கதாநாயகி ரோஷினி ஹரிப்ரியன், அதே சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி,  ராஜா ராணி சீரியலில் வில்லியாக அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த விஜே அர்ச்சனா ஆகியோர் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்கின்றனர்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 உறுதியான 11 போட்டியாளர்கள்.. ஏஜெண்ட் விக்ரமுக்கு இவ்வளோ கோடி சம்பளமா?

இதில் சிம்புவை காதலிப்பதாக சொல்லி பெரும் அலப்பறையை கூடிய ஸ்ரீநிதி நிச்சயம் பிக்பாஸில் தரமான சம்பவத்தை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 9 ஆண் போட்டியாளர்களில் நான்கு போட்டியாளர்கள் விஜய் டிவியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் தொடரில் ராகவன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சத்யா, தொகுப்பாளர் ரக்சன், சூப்பர் சிங்கர் ஷாம் விஷால், குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின், நடிகர் மற்றும் பாடகி சுஜித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார்

அசுரன், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்த டி ஜே அருணாச்சலம், பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் ரஞ்சித், டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து, மாடலிங் துறையில் இருந்து அஜய் மெல்வின் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உறுதியாகி உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது 9 பெண் போட்டியாளர்களும் உறுதியாகி உள்ளனர்.

Also Read: பிக் பாஸ் நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.. 300 எபிசோடுகளிலேயே மூட்டை கட்டிய இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்