அட்லி பட ஹீரோவுக்கு 1000 கோடி வசூல்ன்னு சொன்னாங்க.. தூள் தூளாக உடைந்த கனவு கோட்டை

ராஜா ராணி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லி, அதன் பிறகு விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று படங்களை வரிசையாக இயக்கி தளபதியின் இயக்குனராக  மாறினார். அதன் பின் புகழின் உச்சத்திற்கு சென்ற அட்லி, இப்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு முன்பு ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியாகி 1000 கோடியை தட்டி தூக்கியது. கடந்த சில வருடங்களாக சரிந்து கிடந்த பாலிவுட் திரையுலகை இந்த படம் தான் தூக்கி நிறுத்தியது. ஏனென்றால் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஹிந்தி படங்களுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைப்பதில்லை.

Also Read: அட்லியை போல் பிழைக்கத் தெரியாத சங்கரின் அசிஸ்டன்ட்.. ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத பரிதாபம்!

அப்படிப்பட்ட சூழலில் ஷாருக்கானின் பதான் திரைப்படத்திற்கு 1000 கோடி வசூல் ஆனது, பாலிவுட் பிரபலங்களை பெருமூச்சு விட வைத்தது. அது மட்டுமல்ல தற்போது பதான் படத்தின்  தயாரிப்பாளருக்கு படத்தின் பட்ஜெட் போக 300 கோடி லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை வைத்து பார்த்தால் அந்த படத்தின் பட்ஜெட்  700 கோடி என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் 300 கோடி லாபம் என்பது நல்ல விஷயம் தான். ஆனால் இந்த விஷயத்தை தெரிந்ததும் அட்லியின் மனக்கோட்டை தூள் தூளாக உடைந்துள்ளது. ஏனென்றால் படங்களை எப்போதுமே காஸ்ட்லியாக எடுக்க கூடிய அட்லி, ஜவான் படத்தையும் பிரம்மாண்டமாகவே எடுத்து வருகிறார்.

Also Read: கவர்ச்சியில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுத்த நயன்.. லீக்கான ஜவான் பட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்த அட்லி

அப்படி பார்த்தால் குறைந்தது 1200 கோடியை ஜவான் வசூலித்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும். ஏனென்றால் பதான் படம் 700 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 1000 கோடி வசூலித்ததில் 300 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. ஆனால் ஜவான் படம் பதானை விட 200 கோடி அதிகமாக வசூலித்தால் மட்டுமே  தயாரிப்பாளரின் தலை தப்பும்.

அப்படி இல்லை என்றால் அட்லியுடன் சேர்ந்து ஜவான் படத்தின் தயாரிப்பாளரும் தலையில் துண்டை போட வேண்டியதுதான். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் படத்தை விரைவில் முடித்து, அதில் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்வதற்கான ப்ரொமோஷன் வேலைகளையும் சரியாக செய்து முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அட்லி இருக்கிறார். 

Also Read: பதான் பட்ஜெட்டையே சம்பளமாக வாங்கிய ஷாருக்கான்.. பதறிப்போன அட்லி பட தயாரிப்பாளர்

Next Story

- Advertisement -