குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த ரெண்டு பேரும் இல்ல.. இதுக்கு பேசாம சும்மாவே இருக்கலாம்!

விஜய் டிவியை பொருத்தவரை அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்ச்சி சென்சேஷனல் வெற்றி பெற்று ஒட்டு மொத்த பார்வையாளர்களும் விஜய் டிவி பக்கம் இழுத்து வந்து விடும். அந்த வேலையை இந்த முறையை செய்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. போன சீசனை விட இரண்டாவது சீசன் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சீசன் நிறைய பேருக்கு சினிமா வாழ்க்கை கொடுத்துள்ளது என்பது வேறு விஷயம். புகழ், சிவாங்கி, பவித்ரா போன்ற பலருக்கும் சினிமாவில் அடுத்தகட்ட வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த குப் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே மூன்றாவது சீசனுக்கான போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளை விஜய் டிவி நிறுவனம் தேர்வு செய்து விட்டதாம். ஆனால் இந்த முறை இரண்டாவது சீசனில் இருந்த பல கோமாளிகள் இடம்பெற மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றால் ஞாபகத்திற்கு வரும் புகழ் மற்றும் சிவாங்கி ஆகிய இருவரும் அடுத்த சீசனில் இருக்கமாட்டார்கள் என உறுதியாகச் சொல்கிறது விஜய் டிவி வட்டாரம்.

cwc-stars-pugazh-sivangi-cinemapettai
cwc-stars-pugazh-sivangi-cinemapettai

ஏனென்றால் புகழ் மற்றும் சிவாங்கி ஆகிய இருவருக்கும் அடுத்தடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்து விட்டார்களாம். இருந்தாலும் பட தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசி விஜய் டிவி நிறுவனம் எப்படியாவது இருவரையும் கொண்டு வர முயற்சி செய்யும் என்பது மட்டும் உறுதி.

இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இவர்கள் இருவரும் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கான வேலையே இல்லை என இப்போதே சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்