பணத்தாசை காட்டிய வடிவேலு.. சினிமா வாழ்க்கையை தொலைத்த இரண்டு முன்னணி நடிகைகள்

கவுண்டமணி, செந்தில் என்ற இரண்டு ஆளுமைகள் இருந்தபோதே தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து காமெடி காட்சிகளில் தனி ஒருவனாக பட்டையை கிளப்பி வெகுவேகமாக வளர்ந்து வந்தார் வடிவேலு.

ஒரு கட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களே இல்லை என்பதை போல தொடர்ந்து அவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் வடிவேலு காமெடி என்பதற்காகவே தியேட்டருக்குச் சென்று படம் பார்த்த ரசிகர்கள் ஏராளம்.

அப்படி காமெடியில் ஜாம்பவானாக இருந்த வடிவேலு ஹீரோவாக அறிமுகமான போதும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் கதைக்கேற்ற ஹீரோவாக இல்லாமல் தனக்கேற்ற கதையாக மாற்ற முயற்சி செய்து தற்போது வாய்ப்பு இல்லாமல் வீட்டில் அமர்ந்துள்ளார்.

அப்படி வடிவேலு ஹீரோவாக நடிக்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து விட்டார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக ஸ்ரேயாவுடன் குறைந்தது ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என ஆசைப்பட்டு அவர் கேட்ட சம்பளத்தை தூக்கி கொடுத்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் நடனம் ஆடினார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு ஸ்ரேயா மார்க்கெட் தமிழ் சினிமாவில் டப்பா டான்ஸ் ஆடியது.

vadivelu-shriya-cinemapettai
vadivelu-shriya-cinemapettai

அதனைத் தொடர்ந்து வடிவேலு நடிப்பில் வெளியான எலி திரைப்படத்திலும் சங்கரின் அந்நியன் படத்தில் நடித்த நடிகையான சதாவை ஜோடியாக போடுங்கள் என படக்குழுவினருக்கு கட்டளையிட்டாராம். அப்போது சதாவுக்கு கொஞ்சம் மார்க்கெட் இருந்த நிலையில் வடிவேலுவுடன் நடித்த பிறகு இருந்த மார்க்கெட்டும் போய் தற்போது விலை மாது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

sadha-vadivelu-cinemapettai
sadha-vadivelu-cinemapettai

வடிவேலுடன் நடித்ததால் தான் இவர்களுக்கு மார்க்கெட் போய் விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் ஒரு தவறான பேச்சுள்ளது. இரண்டு நடிகைகளின் மார்க்கெட் டல் அடைந்த போதுதான் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்