ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

எதுக்காகவும் யார்கிட்டயும் மண்டியிட மாட்டேன்.. அரசியலில் கால் பதிப்பதால் எல்லாத்துக்கும் துணிந்த விஜய்

Vijay In Audio Launch: எந்த அளவிற்கு லியோ படத்தை தியேட்டர்களில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்களோ, அதற்கு இணையாகவே ஆடியோ லாஞ் நிகழ்ச்சியை கோலாகலமாக கண்டு ரசிப்பதற்கு ரொம்பவே காத்துக்கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சி தரும்படியாக லியோ ஆடியோ லான்ச் கிடையாது என்று தயாரிப்பாளர் பெரும் குண்டை தூக்கி போட்டு விட்டார்.

இதனால் பல எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்ததோடு மட்டுமில்லாமல் ஒரு அவமானமாகவும் எடுத்துக் கொண்டு புலம்பித் தவிக்கிறார்கள். இதற்கிடையில் எப்படியாவது ஆடியோ லான்ச் நடத்தி விட வேண்டும் என்று படக்குழு சில பல வேலைகளை பார்த்து வருகிறார்கள்.

Also read: கமல் ஒருபோதும் ரஜினியாக முடியாது, விஜய் ஒருபோதும் அஜித்தாக முடியாது.! காரணம் இதுதான்

அதாவது வழக்கம் போல் இப்படத்திற்கும் ஆடியோ லான்ச் வைக்கலாம் என்று முடிவு செய்து நேரு ஸ்டேடியத்தில் நாளை மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதுவும் சாதாரணமாக இல்லை கிட்டத்தட்ட ரெண்டு கோடி செலவு செய்து எல்லா ஏற்பாட்டையும் செய்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிகழ்ச்சி தற்போது நிறுத்தப்பட்ட காரணம் அரசியல் சூழ்ச்சி மற்றும் உதயநிதி, விஜய்யை சீண்டி பார்ப்பதற்காக செய்த உள்குத்து வேலையாகத் தான் இருக்கும் என்று ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

இதிலிருந்து எப்படியாவது மீண்டு ஆடியோ லாஞ்சை நடத்தி விட வேண்டும் என்று ஒரு பக்கம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் மற்றும் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் கமிஷனர் ஆபிஸரிடம் சென்று பர்மிஷன் வாங்குவதற்காக போயிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இரண்டு பேரும் தெனாவட்டாக பேசியதால் கடுப்பான கமிஷனர் இருவரையும் கிட்டத்தட்ட 2மணி நேரம் காக்க வைத்திருக்கிறார்.

Also read: லோகேஷ், விஜய் மோதலால் வெடிக்கும் சர்ச்சை.. இமேஜை தொட்டு பார்த்ததால் வந்த வினை

இந்த விஷயங்கள் அனைத்தும் விஜய் கேள்விப்பட்ட நிலையில், எதற்காகவும் யாரிடமும் போய் மண்டியிட தேவையில்லை. எது நடந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்று எல்லாத்துக்கும் தயாராக தான் இருக்கிறேன் என்று விஜய் இருக்கிறார். அது மட்டுமில்லாமல் விஜய் இடமும் சிலர் பிரஷர் கொடுத்து வருகிறார்கள். அதாவது இவர் இது சம்பந்தமாக முதலமைச்சர் இடம் போயி பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் விஜய்யோ இந்த விஷயத்துக்காக பேச போக மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. என்ன நடந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்று எதுக்கும் கவலைப்படாமல் இருக்கிறார். அதற்கு காரணம் அரசியலில் கால் பதிப்பதால் ரொம்பவே துணிந்து இருக்கிறார். எது எப்படியோ அட்லீஸ்ட் படத்தையாவது ஒழுங்கா ரிலீஸ் பண்ணா போதும் என்கிற நிலைமைக்கு ரசிகர்கள் நிலைமை தற்போது இருக்கிறது.

Also read: லியோ ஆடியோ லான்ச் டிக்கெட் வித்து பிழைக்கணும்னு அவசியம் இல்ல.. பிஸ்மிக்கு விஜய் தரப்பில் கொடுத்த பதிலடி

- Advertisement -

Trending News