தியேட்டரில் முடியாததை ஓடிடியில் சாதித்த விக்னேஷ்.. ஹாட் ஸ்பாட் வெற்றியின் 5 முக்கிய ரகசியங்கள்

Hot Spot: சில படங்கள் தியேட்டரில் கவனம் பெறாவிட்டாலும் டிஜிட்டலில் அனைவரையும் கவர்ந்து விடும். அப்படி தியேட்டரில் பல சர்ச்சைகளுக்கு ஆளான ஹாட்ஸ்பாட் இப்போது ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 4 கதைகளை கொண்ட இப்படம் ட்ரெய்லரிலேயே கடும் விமர்சனத்திற்கு ஆளானது. வசனங்கள் சரியில்லை குடும்பத்தோடு பார்க்க முடியாது என்பது போன்ற கருத்துக்களும் கிளம்பியது. ஹாட்டான கதை, வித்தியாசமான தலைப்புகள்,

Happy Married Life
Golden Rules
Thakkali Chutney
Fame Game

ஆனால் இயக்குனரோ படத்தை பாருங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் கூட அடிக்கலாம் என வெளிப்படையாக கூறினார். அதை அடுத்து படம் வெளிவந்த போது விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் கிடைத்ததே தவிர பெரிய அளவில் கவனம் பெறவில்லை. நடிப்பில் அசத்திய இந்த கலைஞர்களை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்,

Gouri G. Kishan
Adithya Bhaskar
Sandy
Ammu Abhirami
Janani Iyar
Subash as Vetri
Kalaiyarasan
Sofia

ஓடிடியில் கவனம் பெற்ற ஹாட்ஸ்பாட்

ஆனால் இப்போது ஓடிடியில் படத்தை பார்த்த பலரும் படம் பற்றி சில ஆரோக்கியமான விவாதங்களை முன் வைத்துள்ளனர். இன்னும் சிலருக்கு இயக்குனர் சொல்ல வந்த கருத்தும் பிடித்திருக்கிறது. அந்த வகையில் இப்படத்திற்கான வெற்றியின் ஐந்து ரகசியங்களை பற்றி காண்போம்.

முதலாவதாக இயக்குனர் எடுத்துக் கொண்ட கதைக்களம் முற்றிலும் வித்தியாசமானது. முதல் கதையில் ஆண் பெண் திருமண வாழ்க்கை உல்டாவாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை காட்டி இருக்கிறார். ஒரு ஆண் தாலி கட்டுவது, வரதட்சனை கொடுப்பது, பெண்ணோட வீட்ல ஒரு மாதம் தங்குவது என வித்தியாசமான கதைக்களம்.

அதேபோல் இரண்டாவது கதையில் திருமணத்திற்கு சம்மதம் கேட்க வரும் காதல் ஜோடிக்கு தங்களுடைய உறவுமுறை தெரிய வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு நல்ல ட்விஸ்ட்.

வித்தியாசமான கதைக்களம்

மூன்றாவது கதையில் பணத்துக்காக மோசமான வேலையை செய்யும் காதலனை பற்றி காதலிக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு அவர் எடுக்கும் முடிவு தான் கிளைமேக்ஸ். ஒரு ஆம்பள 10 பொம்பள கூட போனாலும் அது தப்பு இல்ல, ஆனா ஒரு பொம்பள ஒரு ஆண் கூட போன அது உலக மகா தப்பு என்பதை நிரூபித்தது இந்த கதை.

நான்காவது கதையில் இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தின் முக்கிய பிரச்சனையை இயக்குனர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். லைவ் ஷோ என குழந்தைகளின் வாழ்க்கையை அழிக்கும் டிவி நிகழ்ச்சிகளை வெளிப்படையாக காட்டியுள்ளார். இயக்குனரும் இதற்கு முன் டிவி சேனலில் வேலை பார்த்தவர்தான், குழந்தைகளை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதை தெளிவுபடுத்தி இந்த கதைக்களம்.

இப்படி இந்த நான்கு கதைகளும் ஒவ்வொரு விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. அதில் நான்காவது கதையில் இயக்குனர் சவுக்கடியான வசனங்கள் மூலம் கவனம் பெற்றுள்ளார். இதுதான் படத்தின் வெற்றிக்கான இரண்டாவது ரகசியம்.

மூன்றாவதாக நடிகை நடிகர்களின் தேர்வும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. அவர்களும் தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். நான்காவது காமெடி, சென்டிமென்ட், வசனங்கள் அனைத்தும் கவனம் பெற்றுள்ளது.

ஐந்தாவது படத்தை கொண்டு சேர்த்த விதமும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இப்படியாக தியேட்டரில் சோடை போனாலும் ஓடிடியில் ஹாட்ஸ்பாட் வெற்றி கண்டுள்ளது.

ஹாட் ஸ்பாட் இயக்குனர் சமீபத்தில் செய்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -