ஓடிடி ரிலீஸ்னா உங்க இஷ்டத்துக்கு படம் எடுப்பீங்களா! ஹாட்ஸ்பாட்டை காரி துப்ப இத்தனை காரணங்களா..

journalists badly criticized that OTT release hotspot tamil movie: கோடை விடுமுறையை ஒட்டி இம்மாத இறுதியில் பல படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஜே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ஹாட் ஸ்பாட். 

விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாட் ஸ்பாட்டில் கலையரசன், கௌரி கிஷன், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர் என பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

ஹாட்ஸ்பாட் படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்கள் பலரும் காரி துப்பி உள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்திற்கு எதிராக வழக்கு ஒன்றையும் பதிவு செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர்.

ஹாட்ஸ்பாட் படத்தில் இடம்பெற்றுள்ள முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள்

உதாரணத்திற்கு சின்ன பொண்ணு அப்பா கிட்ட நான் செக்ஸியா இருக்கேனான்னு? கேட்கிற டயலாக். இந்த கேள்வியும் தப்பு! இதுக்கு வர பதிலும் தப்பு! இனிமேல் பாய்ஸ் தாலி கட்டிக் கொள்ள வேண்டும் என்கிற டயலாக் வேற.  

தாலி கட்டிக் கொள்வது என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட உரிமை. நடைமுறையில் பெண்களே தாலி கட்டிக் கொள்ள வேண்டுமா என்று கேட்கிறபோது, ஆணை தாலி கட்டிக் கொள்ள சொல்வது முரட்டு முட்டாள்தனமாகப்படுகிறது என்று விமர்சிக்கின்றனர்.

அடுத்ததாக இயக்குனர் இதை ஓடிடியில் ரிலீஸ் பண்றோம்னு சொல்ல, அப்பொழுது மொபைல்ல படத்த பார்த்து கெட்டு போயிடுவாங்கன்னு பத்திரிக்கையாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

பதிலுக்கு இயக்குனர் மொபைல்ல தப்பான படங்கள் ஈஸியா பாக்குறாங்க. என் படம் பார்த்து தான் தப்பா போவாங்களான்னு கேக்குறாரு? என் படத்தை சென்சார் போர்டு ஒத்துக்கிட்டார்கள் என்று அவர்களையும் சப்போர்ட்டுக்கு இழுத்து உள்ளார்.

இவையெல்லாம் இப்போ உள்ள டைம்ல தப்பான படம் இல்லை இதைவிட மோசமான படங்கள் ஓடிடி ல இருக்குன்னு சொல்லி கிளம்பிவிட்டார் இயக்குனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் முடிவில், படத்தில் நடித்த கலையரசன் மற்றும் பிற கலைஞர்கள் பேசும் போது, படத்தின் டிரைலர் வெளியான போது போன் செய்து திட்டினார்கள். முழு படம் பார்த்தால் தான் இதற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும் .

இயக்குனர் விக்னேஷ் கதை சொல்லும் விதம் மாறுபட்டிருக்கலாம். ஆனால் சென்று சேரும் இடம் சரியாக இருக்கும்.

எனவே பத்திரிக்கையாளர்கள் இதனை புரிந்து கொண்டு சப்போர்ட் செய்ய வேண்டும் என்று கெஞ்சி கூத்தாடுகிறார்கள் ஹாட்ஸ்பாட் பட குழுவினர்கள்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை