பொறாமையில் போட்டி போட்டு நடிக்கும் 5 ஹீரோயின்கள்.. திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற பேச்சுக்கே இடம் இல்ல

பொதுவாகவே நடிகர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வெற்றி பெறுவார்கள். அதே போல் ஹீரோயின்களும் மற்ற ஹீரோயின்கள் முன்னணியில் இருப்பதை பார்த்து அவர்கள் மீது இருக்கும் பொறாமையால் போட்டி போட்டு நடித்து வருவார்கள். அந்த நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

பூஜா ஹெக்டே -ராஷ்மிகா மந்தனா: தற்போது பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகையாக வலம் வருபவர் தான் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து வருகிறார்கள். அடுத்ததாக தமிழில் விஜய் உடன் பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் நடித்ததும் ராஷ்மிகா போட்டி போட்டு விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து இவருக்கு போட்டி நான் தான் என்று நிரூபித்து காட்டி விட்டார்.

Also read: வில்லனுக்கு உண்டான மரியாதையை கெடுத்துக் கொண்ட 5 படங்கள்.. அஜித்துடன் மோதி மொக்கை வாங்கிய விவேக் ஓபராய்

அமலா பால்-லட்சுமி மேனன்: அமலா பால் தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவருடைய கேரக்டர் மோசமானதாக அமைந்திருந்தாலும் அடுத்த படமான மைனா படத்தில் எல்லாருடைய ஃபேவரிட் ஹீரோயினாக மாறிவிட்டார். இதனை அடுத்து தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, வேலையில்லாத பட்டதாரி போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அப்பொழுது இவருக்கு போட்டியாக லட்சுமிமேனன் சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து கும்கி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், கொம்பன், மிருதன் போன்ற படங்களில் நடித்து வெற்றி பெற்றார். இவர்கள் இருவருக்கிடையே யார் பெரிய ஹீரோயினாக,வருவார் என்று ஒரு போட்டி இருந்தது. ஆனாலும் அமலா பால், விஜய் மற்றும் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வெற்றி பெற்று விட்டார்.

திரிஷா- நயன்தாரா: சில ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகில் பவர்ஃபுல் நடிகையாக நயன்தாரா மற்றும் திரிஷா இனிப்பு மற்றும் கசப்பான நட்பை பகிர்ந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் அவ்வப்பொழுது எலியும் பூனையும் போல சண்டை போட்டுக் கொள்வார்கள். அதாவது நான் தான் பெஸ்ட் ஹீரோயின் அப்படிங்கற மாதிரி இருவருமே இருப்பார்கள். அதில் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது பிறகு த்ரிஷா ரொம்பவே கோபமாகிவிட்டார். அதனால் இவர்கள் இதுவரை ஒன்றாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்க்கவே முடியாது.

Also read: சுட்டி பையனாக மாஸ் காட்டிய சிம்புவின் 5 படங்கள்.. பாடம் கற்றுத் தந்த வேலன், அப்பாவையே மிஞ்சிய STR

சமந்தா- கீர்த்தி சுரேஷ்: இவர்கள் இருவருமே அவ்வப்பொழுது இன்ஸ்டாகிராமில் போஸ்ட்டுகள் மூலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொள்வார்கள். சமந்தா அவருடைய படத்துக்கு சம்பந்தமான ஏதாவது டேக் பண்ணும் போது அதற்கு சம்பந்தமாக கீர்த்தி சுரேஷ் பதிலளிக்கும் விதமாக போட்டிக்கொண்டு செய்வார். இவர்கள் இருவருக்குமே எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாது. ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து மகாநதி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்கள்.

கஸ்தூரி-வனிதா விஜயகுமார்: இவர்கள் இருவருமே ஏதாவது ஒரு பிரச்சனையை சோசியல் மீடியாவுக்கு கொண்டு வந்து அதை பற்றி பேசணும் என்ற விதத்தில் பெரிய வாக்குவாதம் தான் இவர்களுக்குள் நடைபெறும். கஸ்தூரி, வனிதாவை பற்றி கழுவி கழுவி ஊற்றுவதும் வனிதா அதற்கு பதிலடியாக தர லோக்கல் ஆக இறங்கி பேசுவதும் இதுதான் இவர்களுக்குள் தொடர்ந்து வருகிறது. அதாவது கீரியும் பாம்பும் போல் தான் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

Also read: கமல் தேடி போய் வாய்ப்பு கொடுக்கும் 5 நடிகைகள்.. ராசியான நடிகை என பெயர் வாங்கிய ஆண்ட்ரியா

Next Story

- Advertisement -