தீபாவளி ரேஸுக்கு தயாராகும் 5 படங்கள்.. ஏலியன் துணையோடு களமிறங்கும் சிவகார்த்திகேயன்

பண்டிகை நாட்கள், முக்கிய விடுமுறை நாட்கள் என்றாலே பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிவிடும். ஏனென்றால் தியேட்டர்களில் ரசிகர்களின் வரவு அதிகமாக இருக்கும் என்பதாலும், வசூல் அதிகரிக்கும் என்பதாலும் டாப் ஹீரோக்கள் இந்த நாட்களை தான் குறி வைப்பார்கள். அந்த வகையில் இந்த வருட தீபாவளி ரேஸுக்கு தயாராகும் ஐந்து படங்களை பற்றி இங்கு காண்போம்.

அயலான்: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரு சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதையாகும். கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக முடங்கி கிடந்த இப்படம் ஒரு வழியாக இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இந்த ரேசில் ஜெயிக்க ஏலியனை துணைக்கு வைத்துக்கொண்டு களமிறங்கியுள்ளார்.

Also read: நார வாயால் சிக்கி சின்னா பின்னமான சித்தார்த்.. கடைசியில் கமல் காட்டிய கருணை

கேப்டன் மில்லர்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படமும் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. அந்த வகையில் பீரியட் படமாக உருவாகி வரும் இந்த கேப்டன் மில்லர் தனுஷுக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான்: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர் அனைவரின் மத்தியில் ஒரு ஆர்வத்தை தூண்டி இருந்தது. அதைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸுக்காக கார்த்தியின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also read: 33 வயதாகியும் திருமணமாகாத விஜய்யின் தங்கை.. எப்படி வரவேண்டியவங்க புலம்பித் தவித்த பரிதாபம்

துருவ நட்சத்திரம்: கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். சில பிரச்சனைகளின் காரணமாக வருட கணக்கில் முடங்கி கிடந்த இப்படத்தின் வேலைகளை மீண்டும் ஆரம்பிக்க பட குழு ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில் படத்தை தீபாவளிக்கு வெளியிடவும் இயக்குனர் தீவிரம் காட்டி வருகிறார்.

மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இறுதி கட்ட வேலைகளை பார்த்து வரும் பட குழுவினர் படத்தை தீபாவளிக்கு வெளியிடவும் ஆயத்தமாகி வருகின்றனர்.

இவ்வாறு இந்த ஐந்து நடிகர்களும் வரும் தீபாவளியை குறி வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கடந்த வருடம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்த்தி, சிவகார்த்திகேயன் இருவரும் இரண்டாம் முறையாக மோத இருக்கின்றனர். அந்த வகையில் இந்தப் போட்டியில் எந்த படம் வெற்றிவாகை சூடும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: எதிர்பார்ப்பை தூண்டிய அட்லீ படத்தின் முதல் நாள் வசூல்.. பதானை தொடர்ந்து வேட்டைக்கு தயாராகும் ஷாருக்கான்

- Advertisement -