16 வயதில் மாடலிங், சர்ச்சைகளின் ராணி.. த்ரிஷா பெயரை டேமேஜ் செய்த 5 பஞ்சாயத்துகள்

Trisha: தற்போது சோசியல் மீடியாக்களின் ஹாட் டாப்பிக்கே த்ரிஷா தான். 40 வயதை தாண்டிய நிலையிலும் அதே இளமை மாறாமல் இருக்கும் இவரை சர்ச்சைகளின் ராணி என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு ஏகப்பட்ட பஞ்சாயத்துகளை இவர் சந்தித்து இருக்கிறார். அதில் பெரும் பரபரப்பை கிளப்பிய 5 சம்பவங்களும் இருக்கிறது. அதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

அதன்படி திரிஷா 16 வயதிலேயே மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்து விட்டார். அதன் பிறகு மிஸ் சென்னை போன்ற பல பட்டங்களை வென்ற இவர் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால் அது சாமி தான்.

அதையடுத்து கில்லி அவருக்கு பெரும் அடையாளமாக மாறியது. அது மட்டும் இன்றி அடுத்தடுத்து விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த சமயத்தில் தான் இவருடைய குளியலறை வீடியோவும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

அதேபோல் விஜய்யுடன் இவர் நெருக்கமாக பழகுவதாக வெளிப்படையாகவே பேசப்பட்டது. அப்பொழுதுதான் விஜய் வீட்டு முன்பு திரிஷா நடனமாடியது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியது.

பற்றி எரியும் விஜய் திரிஷா விவகாரம்

அதை தொடர்ந்து சுச்சி லீக்ஸ் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்தது. இதற்கிடையில் விஜய் வேறு ஹீரோயின்களுடன் நடிக்க ஆரம்பித்தார். திரிஷாவும் தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்த நிலையில் ராணாவுடன் அவர்கள் காதலில் இருப்பதாக பேசப்பட்டது.

அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வைரலானது. ஆனால் அந்த காதல் முறிவுக்கு பின் அவர் தயாரிப்பாளர் வருண் மணியனை காதலித்து திருமண நிச்சயதார்த்தமும் செய்தார்.

திடீரென என்ன நடந்ததோ அந்த திருமணமும் நின்று போனது. இப்படி அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கு ஆளான த்ரிஷாவின் மார்க்கெட் சரிய தொடங்கியது. அப்போது தான் லியோவில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அது மட்டுமா சில காலம் பிரிந்திருந்த ஜோடி இதன் மூலம் மீண்டும் நெருங்கி விட்டதாக பேசப்பட்டது. அதற்கேற்றார் போல் இருவரும் வெளிநாடுகளில் சுற்றித் திரியும் போட்டோக்களும் ஒரு பக்கம் வெளியாக தொடங்கியது.

இதனால் விஜய்யின் மனைவி அவரை விட்டு பிரிந்திருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் தான் விஜய்யின் பிறந்தநாள் அன்று த்ரிஷா வெளியிட்ட ஒரு போட்டோ இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

அதை அடுத்து விஜய்யை சோசியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அது மட்டும் இன்றி பட்டினப்பாக்கம் அப்பார்ட்மெண்டில் விஜய்க்கு ஆபீஸ் இருக்கிறது. திரிஷா அங்கு ஒரு வீட்டை வாங்கி சமீபத்தில் தான் குடி புகுந்தாராம்.

ஏற்கனவே விஜயின் நீலாங்கரை வீட்டுக்கு அருகில் ஒரு வீட்டை அவர் வாங்கி இருந்தார். தற்போது இப்படி ஒரு தகவலும் வெளிவந்த நிலையில் ஓஹோ கதை அப்படி போகுதா என கலாய்க்க தொடங்கி விட்டனர். விரைவில் விஜய் தன் குடும்ப போட்டோவை வெளியிட்டால் தான் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் ஒரு முடிவு வரும்.

த்ரிஷாவால் கிளம்பிய சர்ச்சை

Next Story

- Advertisement -