அடுத்த ஆறு மாதத்தில் இந்தியளவில் கோலிவுட்டை தலைநிமிர்த்த வரும் 14 படங்கள்.. டபுள் ட்ரீட் கொடுக்கும் ஆண்டவர்

2024 Upcoming Movies: இந்த வருடம் ஆரம்பித்து 5 மாதங்கள் முடிந்த நிலையில் பெரிய வெற்றி படம் என்று பார்த்தால் அரண்மனை 4 தான். இந்த மாத தொடக்கத்தில் வெளியான இப்படம் 100 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

இதனால் புத்துணர்ச்சி பெற்ற கோலிவுட் அடுத்தடுத்து வசூல் வேட்டைக்கு தயாராக இருக்கிறது. அதன்படி அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்கள் ஒவ்வொன்றாக வெளிவர இருக்கிறது. அப்படி வெளியாகும் 14 படங்களை பற்றி இங்கு காண்போம்.

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் வரும் ஜூன் அல்லது ஜூலையில் வெளியாக இருக்கிறது. அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மகாராஜா ஜூன் 13 வெளியாகிறது.

ராயன்
மகாராஜா
இந்தியன் 2
தங்கலான்
மெய்யழகன்

மேலும் கமல் நடித்துள்ள இந்தியன் 2 ஜூலை 12ஆம் தேதியும் விக்ரம் நடித்துள்ள தங்கலான் ஜூலை மாத இறுதியிலும் வெளிவர இருக்கிறது. தொடர்ந்து கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள மெய்யழகன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகும்.

அடுத்தடுத்து வெளியாகும் டாப் ஹீரோக்களின் படங்கள்

அடுத்ததாக விஜய் நடித்துள்ள கோட் செப்டம்பர் 5ஆம் தேதியும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் செப்டம்பர் 27ஆம் தேதியும் வெளியாகிறது. மேலும் தலைவர் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் அக்டோபர் 10 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் வெற்றிமாறனின் விடுதலை 2 இதே அக்டோபர் மாதத்தில் தான் வெளிவர உள்ளது. அடுத்ததாக தீபாவளியை முன்னிட்டு நான்கு படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வரிசையில் கங்குவா, விடாமுயற்சி, விக்னேஷ் சிவனின் LIC, கவின் 5 ரேசில் இருக்கிறது. ஆனால் இதில் விடாமுயற்சி மட்டும் இன்னும் இழுபறியாக உள்ளது. இறுதியாக கமலின் தக் லைஃப் நவம்பர் அல்லது வருட கடைசியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படியாக இந்த 14 படங்களும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அதில் விடாமுயற்சிக்கு இந்த வருடமாவது விடிவு காலம் வந்து விடாதா என்பது தான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

2024 இரண்டாம் பாதி கோலிவுட்டுக்கு சாதகமா.?

- Advertisement -