பிழைக்க வாய்ப்பே இல்லை, கை விரித்த மருத்துவர்கள்.. மயிரிழையில் உயிர் தப்பிய அஜித்தின் தம்பி

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் இப்போது விடா முயற்சியில் நடிக்க இருக்கிறார். இது குறித்து அறிவிப்பு வெளிவந்த நாள் முதலில் இருந்தே ரசிகர்கள் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் அஜித்தின் தம்பி சாவின் விளிம்பையே எட்டிப் பார்த்து வந்திருக்கிறார் என்னும் செய்தி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

அதாவது அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர் தான் நடிகர் பாலா. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் உடன் பிறந்த சகோதரர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ், மலையாள படங்களில் நடித்திருக்கும் இவர் அண்மையில் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Also read: விஜய், அஜித் சினிமாவை விட்டுப் போகணும்னு ஆசைப்படும் 5 நடிகர்கள்.. ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏங்கும் தங்கலான்

அதனால் சிறுத்தை சிவா கங்குவா படப்பிடிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு மருத்துவமனையில் தன் தம்பிக்கு ஆதரவாக இருந்தார். மேலும் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கல்லீரலில் பிரச்சனை இருப்பதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

ஆனால் அவர் பிழைப்பதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி ஒரு குண்டையும் போட்டு இருக்கின்றனர். இதனால் அதிர்ந்து போன பாலாவின் குடும்பத்தினர் இது குறித்து மீடியாவுக்கு தகவல் தர கூட முயற்சி செய்திருக்கின்றனர். இருப்பினும் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என பாலாவுக்காக இறைவனை பிரார்த்திக்கவும் செய்து இருக்கின்றனர்.

Also read: அஜித்தின் அழகில் மயங்கி காதலித்த 5 நடிகைகள்.. திருமணத்திற்கு பிறகும் கூட விடாமல் துரத்திய ஹீரோயின்

அதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே அவருடைய உடல் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவர்களும் தீவிர சிகிச்சை கொடுத்ததன் பலனாக அவருடைய உடல் அறுவை சிகிச்சைக்கு தயாராகும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது. அதன் பிறகு தான் இந்த ஆபரேஷன் நடைபெற்று பாலா உயிர் பிழைத்து இருக்கிறார்.

இப்படி டாக்டர்கள் கை விரித்த நிலையில் மெடிக்கல் மிராக்கிள் என்று சொல்வது போல மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார் பாலா. அது குறித்து தற்போது மகிழ்ச்சியுடன் கூறிய அவர் ரசிகர்களின் வேண்டுதலும், அன்பும் தான் என்னை மீண்டும் நடமாட வைத்திருக்கிறது எனவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Also read: ஷாலினிக்காக அஜித் கொடுத்த வரதட்சணை.. இப்படியும் ஒரு காதலா என வியக்க வைத்த சம்பவம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை