குட்டிக்கரணம் போட்டு நடிச்சும் பிரயோஜனம் இல்ல.. ராமராஜனிடம் தோற்றுப்போன கமல்

Kamal and Ramarajan: கமல் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல், சுமார் 230 படங்களில் ஹீரோவாக தொடர்ந்து நடித்திருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் தக் லைப், இந்தியன் 2 மற்றும் 3 ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலங்களில் ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களை பார்த்து தான் இப்பொழுது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்.

அத்துடன் சாதாரணமாக ஒரு படத்தை ஏற்று நடிக்க கூடியவர் அல்ல. எந்த படமாக இருந்தாலும் அதன் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கிற மாதிரி நடித்து சாதனை பெறக்கூடியவர். கதாபாத்திரங்களுக்கு தகுந்தார் போல் உடலை வருத்திக்கொண்டு உலக நாயகனாக ஜொலித்திருக்கிறார்.

குள்ளமாக நடித்த கமல்

முக்கியமாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் மூன்று கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அதில் அப்பு கேரக்டர் அவ்வளவு எளிதாக யாராலும் மறந்திருக்க முடியாது. காலை மடக்கிக் கொண்டு குள்ளமாக நடித்து அனைவரிடமும் கைதட்டலை பெற்றிருக்கிறார். இப்படம் 1989 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்துடன் போட்டி போட்டு வந்த படங்கள் அனைத்தும் வந்த சுவடு தெரியாமலேயே காணாமல் போய் இருக்கிறது.

ஆனால் கமலுடன் நான் மோதிப் பார்க்கிறேன் என்று சொல்வதற்கு ஏற்ப அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு போட்டியாக ராமராஜன் களமிறங்கினார். அப்படியே அவர் நடிப்பில் வெளிவந்த படம் தான் கரகாட்டக்காரன். இப்படம் அபூர்வ சகோதரர்கள் படம் வெளிவந்து இரண்டு மாதங்கள் கழித்து அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆனது.

ஆனாலும் ஒரு பக்கம் அபூர்வ சகோதரர்கள் இன்னொரு பக்கம் கரகாட்டக்காரன் என்று திருவிழா மாதிரி அனைத்து திரையரங்களிலும் பட்டைய கிளப்பியது. கடைசியில் கிராமத்து நாயகனாக தலையில் கரகாட்டத்தை வைத்து ஆடிய ராமராஜன் படம் தான் வெற்றி பெற்றது என்ற சொல்லும் அளவிற்கு மக்களிடம் பேரும் புகழையும் வாங்கிவிட்டது.

குள்ளனாக குட்டிக்கரணம் போட்டு நடிச்சது பிரயோஜனம் இல்லாத அளவிற்கு உங்க படம் ஈசியாக பெயர் வாங்கி விட்டதே என்று கமல், ராமராஜனிடம் கூறியிருக்கிறார். இரண்டு படங்கள் நன்றாக இருந்தாலும் கஷ்டப்பட்டு உயிரைக் கொடுத்து நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தை விட கரகாட்டக்காரன் படம் பெயர் வாங்கிவிட்டது.

கமலை அசர வைத்த ராமராஜன்

Stay Connected

1,170,275FansLike
132,044FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -