முன்ன வெச்ச காலை, பின்ன வைத்த பழக்கம் கிடையாது.. மூணு வருஷத்துக்கு மேல் படாத பாடு படுத்தும் பாரதிகண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பத்து வருடங்களாக மனைவியை சந்தேகப்பட்டதால் தற்போது பிள்ளைகளாலும் வெறுத்து ஒதுக்கப்பட்டிருக்கிறார் டாக்டர் பாரதி. இருப்பினும் தன்னுடைய தவறான செயலை நினைத்து மனம் வருந்தும் பாரதி மீண்டும் கண்ணம்மா மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்கிறார்.

இதற்காக கண்ணம்மா சென்ற சொந்த ஊருக்கு சென்று அங்கு பஞ்சாயத்தில் அடி உதை எல்லாம் வாங்கிய பிறகும் மீண்டும் கண்ணம்மா தான் வேண்டும் என பாரதி ஊருக்குள் மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

Also Read: 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த விஜய் டிவி பிரபலம்.. அதிரடியாக கைது செய்த காவல்துறை

இது குறித்து பஞ்சாயத்து தலைவர்கள் கேட்டபோது, ‘முன் வைத்த காலை, பின் வைக்கும் பழக்கம் கிடையாது. இந்த ஊரைவிட்டு கண்ணம்மா மற்றும் குழந்தைகளுடன் தான் செல்வேன்’ என கூறுகிறார். இதன் பிறகு ஊர் பெரியவர்களும் கண்ணம்மா மற்றும் குழந்தைகளின் அனுமதி உடன், நீ அவர்களை கூட்டிக்கொண்டு செல்லலாம் என்று விட்டுவிடுகின்றனர்.

இப்படி பாரதிகண்ணம்மா சீரியல் துவங்கப்பட்ட மூன்று வருடங்களாகவே சின்னத்திரை ரசிகர்களை படாத பாடுபடுத்தும் இந்த சீரியலின் இயக்குனர் இப்போது மூவேந்தர் படத்தை அப்படியே காப்பி அடித்து கதையை ஓட்டுகிறார்.

Also Read: சன் டிவி டிஆர்பியை உடைக்க பலே திட்டம்.. புத்தம்புது 4 சீரியல்களை இறக்கிய விஜய் டிவி

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி, கண்ணம்மாவை சமாதானப்படுத்துவதற்காக செய்யும் ஒவ்வொரு வேலைகளும் மூவேந்தர் படத்தில் சரத்குமார் தேவயானியை பார்ப்பது போலவே இருக்கிறது என்றும் நெட்டிசன்கள் இந்த சீரியலை பார்த்து கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

அத்துடன் முன்பு இருந்த பாரதியை விட இப்போது இருக்கும் பாரதி காமெடி என்கின்ற பெயரில் என்னென்னமோ செய்கிறார் பார்க்க சகிக்களை, சீக்கிரம் பாரதிகண்ணம்மா சீரியல் முடித்துவிட்டு அடுத்த சீசனை துவங்குங்கள் என்றும் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் குவிகிறது.

Also Read: இணையத்தை தெறிக்க விடும் இந்த வார டிஆர்பி லிஸ்ட்.. வந்த வேகத்திலேயே டஃப் கொடுக்கும் புது சீரியல்